திருக்குறள்
ஓலை எண் :   270

Zoom In NormalZoom Out

தார்   நிலைக்கெளிதாம் நீர தரண். புறத்தாரால் கோடற்கு  அரிதாய்;
உட்கொண்ட  பலவகை  உணவிற்றாய்;  அகத்தாரது  போர்நிலைக்கு
எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. கோடற்கு அருமை: இளை
கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு
தலைமைபற்றிக்    கூறினமையின்,    மற்றுள்ள    நுகரப்படுவனவும்
அடங்கின.   நிலைக்கு  எளிதாம்  நீர்மையாவது,  அகத்தார்  விட்ட
ஆயுதம்  முதலிய  புறத்தார்மேல்  எளிதில் சேறலும் அவர் விட்டன
அகத்தார்மேல்  செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின. எல்லாப்
பொருளும்   உடைத்தாய்  இடத்துதவும்  நல்ஆள்  உடைய  தரண்.
அகத்தோர்க்கு  வேண்டும்  பொருள்கள்  எல்லாவற்றையும்  உள்ளே
உடைத்தாய்;   புறத்தோரால்   அழிவெய்தும்   எல்லைக்கண் அஃது
எய்தாவகை  உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது.
அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும்  முதலிய
நற்குணங்கள்  உடைமை  பற்றி ''நல்லாள்'' என்றார். முற்றியும் முற்றா
தெறிந்தும்  அறைப்படுத்தும்  பற்றற்  கரிய தரண். புகலொடு போக்கு
ஒழியும்  வகை  நெருங்கிச்  சூழ்ந்தும்;  அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த
இடன்   நோக்கி   ஒருமுகமாகப்   பொருதும்;  அகத்தோரை அவர்
தெளிந்தோரை   விட்டுக்   கீழறுத்துத்   திறப்பித்தும்;  புறத்தோரால்
கொள்ளுதற்கு  அரியதே  அரணாவது.  இம் மூன்று உபாயத்துள்ளும்
முதலாவது     எல்லாப்     பொருளும்உடைமையானும்,    ஏனைய
நலலாளுடைமையானும்  வாயாவாயின.  முற்றாற்றி  முற்றி  யவரையும்
பற்றாற்றிப்   பற்றியார்  வெல்வது  அரண்.  தானைப்  பெருமையால்
சூழ்தல்  வல்லராய்  வந்து  சூழ்ந்த புறத்தோரையும்; தன்னைப்பற்றிய
அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வ