தே அரணாவது. உம்மை, சிறப்பும்மை. பற்றின்
கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். ''வெல்வது'' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை
ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி
மாண்ட தரண். போர் தொடங்கின
அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர்
செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், ''முனைமுகத்துச் சாய'' என்றார். வினை வேறுபாடுகளாவன:
பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச்
சாய்ப்பன செய்தல். ''மற்றும் வேண்டும் மாட்சி'' யென்றது,
புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண். அரண்;
மேற்சொல்லப்பட்ட
மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம். வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, ''வினைமாட்சியில்லார''் என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால்
அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், ''அவையுடைத்தன்று'' என்றும்
கூறினார். இவை இரண்டு பாட்டானும்
காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது. |