திருக்குறள்
ஓலை எண் :   273

Zoom In NormalZoom Out

இவை     மூன்று  பாட்டானும்  பொருளது  சிறப்புக்  கூறப்பட்டது.
அறன்ஈனும்  இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதின்றி வந்த பொருள்.
செய்யும்  திறத்தினை  அறிந்து  அரசன்  கொடுங்கோன்மையிலனாக
உளதாய    பொருள்;    அவனுக்கு    அறத்தையும்   கொடுக்கும்,
இன்பத்தையும்  கொடுக்கும்.  செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு
உரிய  நெறி.  ''இலனாக''  என்றது  ''இன்றி''  எனத் திரிந்து நின்றது.
''செங்கோல்''  என்று  புகழப்படுதலானும்,  கடவுட்பூசை தானங்களாற்
பயனெய்தலானும்,  ''அறன்  ஈனும்''  என்றும்,  நெடுங்காலம்  நின்று
துய்க்கப்படுதலான்,  ''இன்பமும் ஈனும்'' என்றும் கூறினார்.  அதனான்
அத்திறத்தான்  ஈட்டுக என்பதாம். அருளொடும் அன்பொடும் வாராப்
பொருள்ஆக்கம் புல்லார் புரள விடல். தாம் குடிகள் மாட்டுச் செய்யும்
அருளொடும்,  அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத
பொருளீட்டத்தை;  அரசர் பொருந்தாது கழியவிடுக. அவற்றோடு கூடி
வருதலாவது,    ஆறிலொன்றாய்    வருதல்,    அவ்வாறு  வாராத
பொருளீட்டம்  பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும்  கொண்டு
இறத்தலின்,  அதனைப்  ''புல்லார்''  என்று  ஒழியாது,  ''புரளவிடல்''
என்றும்  கூறினார்.  உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும்   வேந்தன்  பொருள்.  உடையாரின்மையின்  தானே
வந்துற்ற பொருளும்; சுங்கமாகிய பொருளும்; தன் பகைவரை வென்று
திறையாகக்  கொள்ளும்  பொருளும்;  அரசனுக்கு உரிய பொருள்கள்.
உறுபொருள்:   வைத்தார்  இறந்துபோக நெடுங்காலம்  நிலத்தின்கண்
கிடந்து  பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம்
-    கலத்தினும்   காலினும்   வரும்   பண்டங்கட்கு   இறையாயது.
தெறுபொருள்:  ''தெறுதலான்  வரும்  பொருள்'' என விரியும். ஆறில்
ஒன்று  ஒழியவும்  உரியன  கூறியவாறு.  இவை  மூன்று பாட்டானும்
அஃது ஈட்டும் நெறி