திருக்குறள்
ஓலை எண் :   274

Zoom In NormalZoom Out

கூறப்பட்டது.    அருள் என்னும்  அன்பீன் குழவி பொருள் என்னும்
செல்வச்   செவிலியால்   உண்டு.  அன்பினால்  ஈனப்பட்ட  அருள்
என்னும்   குழவி;   பொருள்   என்று   உயர்த்துச்  சொல்லப்படும்
செல்வத்தையுடைய   செவிலியான்   வளரும்.   தொடர்பு  பற்றாதே
வருத்தமுற்றார்மேல்  செல்வதாய  அருள்  தொடர்பு பற்றிச் செல்லும்
அன்பு  முதிர்ந்துழி  உளதாவதாகலின், அதனை ''அன்பு ஈன் குழவி''
என்றும்,     அது     வறியார்மேற்     செல்வது     அவ்வறுமை
களையவல்லார்க்காதலின்  பொருளை  அதற்குச்  ''செவிலி''  என்றும்,
அஃது  உலகிற்  செவிலியர்  போலாது, தானே  எல்லாப் பொருளும்
உதவி  வளர்த்தலிற் செல்வச்  செவிலி  என்றும் கூறினார். குன்றேறி
யானைப்போர்   கண்டற்றால்  தன்கைத்தொன்  ண்டாகச்  செய்வான்
வினை.  தன்  கையதாகிய  பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக்
கொண்டான்  அதனைச்  செய்தல்;  ஒருவன்  மலைமேல்  ஏறிநின்று
யானைப்போரைக்   கண்டால்   ஒக்கும்.  ''கைத்து  உண்டாக ஒன்று
செய்வான''் எனக் கூட்டுக. ''ஒன்று''என்பது வினையாதல்  ''செய்வான்''
என்றதனாற்  பெற்றாம். குன்றேறியான்  அச்சமும்  வருத்தமும் இன்றி
நிலத்திடை  யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து
காணுமதுபோலக்  கைத்து  உண்டாக  வினையை  மேற்கொண்டானும்
அச்சமும்  வருத்தமும்  இன்றி  வல்லாரை  ஏவித் தான் இனிதிருந்து
முடிக்கும்என்பதாம்.   செய்க  பொருளைச்  செறுநர்  செருக்கறுக்கும்
எஃகதனின்  கூரிய  தில். தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை
உண்டாக்குக;   தம்  பகைவர்  தருக்கினை  அறுக்கும்  படைக்கலம்
அதுவாம்;  அதற்கு  அதுபோலக்  கூரிய படைக்கலம் பிறிது இல்லை.
''அதுவாம்'' ''அதற்கு'' என்பன அவாய் நிலையான் வந்தன.