திருக்குறள்
ஓலை எண் :   275

Zoom In NormalZoom Out

பொருளைச்     செய்யவே  பெரும்படையும்  நட்பும்  உடையராவர்.
ஆகவே,  பகைவர்  தருக்கு  ஒழிந்து  தாமே  அடங்குவர்  என்பார்,
''செறுநர்  செருக்கு  அறுக்கும்  எஃகு''  என்றும்,  ஏனை   எஃகுகள்
அதுபோல  அருவப்பொருளை  அறுக்க  மாட்டாமையின்   ''அதனிற்
கூரியது  இல்'' என்றும் கூறினார். ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்
கெண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. நெறியான் வரும் பொருளை
இறப்ப  மிகப்  படைத்தாரக்கு;  மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே
எளிய  பொருள்களாம். காழ்த்தல்:  முதிர்தல்.  பயன் கொடுத்தல்லது
போகாமையின்,  ''ஒண்பொருள்''  என்றும்,  ஏனை இரண்டும்  அதன்
விளைவாகலின்    தாமே    ஒருகாலத்திலே    உளவாம்  என்பார்
''எண்பொருள்''   என்றும்   கூறினார்.  இவை  நான்கு  பாட்டானும்
அதனான்   வரும்  பயன்  கூறப்பட்டது.  இனி  ,அப்பொருளினான்
ஆவதாய்   வெல்வதாய  படை  இரண்டு  அதிகாரத்தாற்  கூறுவான்
தொடங்கி  ,முதற்கண்  ''படை  மாட்சி''  கூறுகின்றார்  . அஃதாவது,
படையினது  நன்மை  .அதிகார  முறைமையும்  இதனான்  விளங்கும்.
உறுப்பமைந்  தூறஞ்சா  வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம்
தலை.  யானை  முதலிய  நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண்
ஊறுபடுதற்கு  அஞ்சாது  நின்று பகையை வெல்வதாய படை; அரசன்
செல்வங்கள்  எல்லாவற்றுள்ளும்  தலையாய செல்வம். ஈண்டுப் படை
என்றது,   அந்நான்கன்   தொகுதியை,  ஊறு  அஞ்சியவழி  வேறல்
கூடாமையின்,   ''ஊறு  அஞ்சா''  என்றும்,  ஒழிந்த  அங்கங்கட்கும்
அரசன்  தனக்கும்  காவலாகலின்  ''வெறுக்கையுள்  தலை''  என்றும்
கூறினார்.    உலைவிடத்    தூறஞ்சா   வன்கண்  தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. தான் சிறியதாய வழியும்