திருக்குறள்
ஓலை எண் :   276

Zoom In NormalZoom Out

அரசற்குப்   போரின்கண்  உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது
நின்று  தாங்கும் வன்கண்மை; அவன் முன்னோரைத் தொடங்கிவரும்
படைக்கல்லது   உளதாகாது.   இழிவு  சிறப்பு  உம்மை விகாரத்தால்
தொக்கது.   மூலப்படை,  கூலிப்படை,  நாட்டுப்படை,  காட்டுப்படை,
துணைப்படை,   பகைப்படை   என்னும்   அறுவகைப்படையுள்ளும்
சிறப்புடையது     மூலப்படை     யாகலான்    அதனை   அரசன்
''வெல்பொறியும்    நாடும்    விழுப்பொருளும்   தண்ணடையும்  -
கொல்களிறும்  மாவும்  கொடுத்தளிக்க.''  பு.வெ.மா.தும்பை2  என்பது
குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் ''மௌலம்'' என்ப.ஒலித்தக்கால்
என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். எலியாய பகை
திரண்டு  கடல்  போல  ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்?
அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்.உவமைச்சொல்
தொக்கு   நின்றது.   இத்தொழில்   உவமத்தால்  திரட்சி பெற்றாம்.
வீரரல்லாதார்  பலர்  திரண்டு  ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்:
அவன்  கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற
நின்றமையின்,   இது   பிறிது   மொழிதல்   என்னும்  அலங்காரம்.
வீரரல்லாதார்  பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம்.
இவை    மூன்று    பாட்டானும்   முறையே   அரசனுக்குப்  படை
ஏனையங்கங்களுள்    சிறந்தது    என்பதூஉம்,   அதுதன்னுள்ளும்
மூலப்படை சிறந்தது என்பதூஉம் அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான்
என்பதூஉம்  கூறப்பட்டன. அழிவின்றி  அறைபோகா தாகி வழிவந்த
வன்க  ணதுவே  படை.  போரின்கண் கெடுதல்  இன்றி; பகைவரால்
கீழறுக்கப்படாததாய் தொன்று