தொட்டு வந்த தறுகண்மையை
உடையதே அரசனுக்குப் படையாவது. அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, ''கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு''. பு.வெ.மா.வாகை,22 என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான்
வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும். கூற்றுடன்று
மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.
கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது.
''மருந்தில் கூற்று'' ஆகலின், புற.நா.3 உம்மை சிறப்பும்மை.
மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே
ஏமம் படைக்கு. தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார்
சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு அரணாவது. இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு
வாராமற்காத்தலும், ''அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை'' பு.வெ.மா.வஞ்சி 20 முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின்,
வேறு அரண் வேண்டா என்பதாம். தார்தாங்கிச் செல்வது தானை
தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற் |