திருக்குறள்
ஓலை எண் :   279

Zoom In NormalZoom Out

ரை   வௌவல் , இளிவரவாயின  செய்தல் முதலியவற்றான் வருவது.
இவையுள்  வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின்,
''இல்லாயின் வெல்லும்'' என்றார். நிலைமக்கள் சால  உடைத்தெனினும்
தானை  தலைமக்கள் இல்வழி இல். போரின்கண் நிலையுடைய வீரரை
மிக உடைத்தே யாயினும்; தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித்
தானை  நில்லாது. படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின்,
காண்போர்    இல்லெனப்   பொராது   தானும்   போம்  என்பார்,
''தலைமக்கள்  இல்  வழி  இல்''  என்றார். இவை மூன்று பாட்டானும்
முறையே     படைத்தகையின்மையானும்     அரசன்    கொடைத்
தாழ்வுகளானும்,   தலைவர்   இன்மையானும்  தாழ்வு   கூறப்பட்டது.
அஃதாவது,         அப்படையது         மறமிகுதி.     அதிகார
முறைமையும்இதனானே  விளங்கும். என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்
பலர்என்ஐ  முன்நின்று  கல்நின்  றவர்.  பகைவீர்,இன்று இங்கு என்
தலைவன்  எதிர் போரேற்று  நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின்
கல்லின்கண்ணே   நின்ற  வீரர்  பலர்;  நீவிர்  அதன்கணின்றி நும்
உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை
ஒழிமின்.    ''என்    ஐ''    எனத்   தன்னோடு  தொடர்புபடுத்துக்
கூறினமையின்,  அவன்  வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல்.
''நம்பன்  சிலை  வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன்
முடிப்பூண்  அரசுமிலை'',சீவக.காந்தர்வ.317  என, பதுமுகன் கூறினாற்
போல  ஒரு  வீரன்,  தன்  மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு.
இப்பாட்டு  ''நெடுமொழி  வஞ்சி''.பு.வெ.மா.வஞ்சி.12 கான முயல்எய்த
அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. கான முயல் எய்த
அம்பை ஏந்தலினும்; வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த
வேலை ஏந்தல் நன்று. ''கானமுயல்'' என்றதனால் வெள்ளி