திருக்குறள்
ஓலை எண் :   280

Zoom In NormalZoom Out

டை     என்பதும்,  ''பிழைத்த''  என்றதனாற் பிழையாமல் என்பதும்,
முயற்குத்தக    ''எய்த''   என்றதனான்   யானைக்குத்தக   எறிதலும்
வருவிக்கப்பட்டன.  இது  மாற்றரசன்  படையொடு  பொருதான்  ஓர்
வீரன்,   அது   புறங்கொடுத்ததாக   நாணிப்  பின்  அவன்றன்மேற்
செல்லலுற்றானது  கூற்றுபேராண்மை  என்ப  தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை  மற்றதன்  எஃகு.  பகைவர்மேற் கண்ணோடாது செய்யும்
மறத்தை  நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; அவர்க்கு
ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீாத்துக்கோடற் பொருட்டு
ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.
''என்ப''    என்பது    பின்னும்    இயைந்தது.     ஊராண்மை  -
உபகாரியாம்தன்மை,  அஃதாவது,  இலங்கையர் வேந்தன் போரிடைத்
தன்   தானை  முழுதும்படத்  தமினாய்  அகப்பட்டானது  நிலைமை
நோக்கி  அயோத்தியர்  இறை மேற்செல்லாது, ''இன்று போய் நாளை
நின்தானையோடு   வா,''  என  விட்டாற்போல்வது. இவை  இரண்டு
பாட்டும்  தழிஞ்சி  பு.வெ.மா.வஞ்சி  3 கைவேல் களிற்றொடு போக்கி
வருபவன்   மெய்வேல்   பறியா   நகும்.  கைப்படையாய வேலைத்
தன்மேல்  வந்த  களிற்றோடு  போக்கி; வருகின்ற  களிற்றுக்கு வேல்
நாடித்திரிவான்;  தன்  மார்பின்கண்  நின்ற வேலைக் கண்டு பறித்து
மகிழும்.    களிற்றோடு    போக்கல்    -   களிற்றினது  உயிரைக்
கொடுபோகுமாறு  விடுதல்.  மகிழ்ச்சி, தேடிய  தெய்தலான்.  இதனுள்
களிற்றையல்லது  எறியான்  என்பதூஉம்,   சினமிகுதியான் வேலிடை
போழ்ந்தது     அறிந்திலன்    என்பதூஉம்,   பின்னும்  போர்மேல்
விருப்பினன்     என்பதூஉம்          பெறப்பட்டன.  நூழிலாட்டு.
பு.வெ.மா.தும்பை16       விழித்தகண்      வேல்கொண்    டெறிய
அழித்திமைப்பின்ஒட்ட