பெற்று அறியாமையின்,
அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் ''போரெனிற்புகலும் புனைகழல் மறவர்
''புறநா.31 என்றும், ''புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'' புறநா.68 என்றும் கூறினார். இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; அது தப்பியவாறு சொல்லி
எள்ளுதற்குரியார் யாவர்? இழைத்தல்: இன்னது
செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். ''சொல்லி'' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோள் தக்க துடைத்து. தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்;
அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. மல்குதலாகிய
இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார்
பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த
வினையால் துறக்கமெய்தும் சாதலை ''இரந்துகோள்
தக்கது உடைத்து'' என்றார். இவை நான்கு
பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.
இனி, அப்படைபோல அரசனுக்கு
வினையிடத்து உதவுவதாய நட்பினை
ஐந்து அதிகாரம் விதிமுகத்தானும், பன்னிரண்டு
அதிகாரம் எதிர்மறை முகத்தானும் கூறுவான் தோடங்கி, விதிமுக
அதிகாரம் ஐந்தனுள்ளும் முதற்கண் நட்புக்
கூறு கின்றார். அஃதாவது இன்னது என்பதூஉம்
அதிகாரம் முறைமையும் இதனுள் விளங்கும்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. |