றும் அவர்க்கு இன்பஞ்
செய்தல்; நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். நயத்தினைச்
செய்தலான் ''நயம்'' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும்.
இவை இரண்டு பாட்டானும்
அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது. நகுதற்
பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தல்
பொருட்டு. ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல்
தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற்
பொருட்டன்று; அவர்க்கு வேண்டாத செய்கை
உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே
பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை ''மிகுதி'' என்றும்,
அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின்,
''மேற்சென்று'' என்றும், இன்சொற்கு மீளாமையின், ''இடித்தற்பொருட்டு'' என்றும்
கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்புஆம் கிழமை தரும். ஒருவனோடு
ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய
காரணங்கள் வேண்டுவதில்லை; இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே
நட்பாம் உரிமையைக் கொடுக்கும். புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். ''இன்றே போல்க நும் புணர்ச்சி''புறம்.58 என்றதும் அதனை. பழகுதல் - பலகால் கண்டும் சொல்லாடியும்
மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும்
பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின்,
அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்
என்பதாம்.புற.நா.217 நட்பிற்குப் புணர்ச்சி,
பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும்
காரணம் மூன்றனுள்ளும், பின்னது சிறப்புடைத்து
என்பது இதனான் கூறப்பட்டது. முகம்நக
நட்பது நட்பன்று நெஞ்சத் தகம்நக நட்பது
நட்பு. |