திருக்குறள்
ஓலை எண் :   288

Zoom In NormalZoom Out

செய்யாவகை      நெருக்கியும்;      அவ்வழக்குச்     செய்யாவழிச்
செய்விக்கவும்   வல்லாரை;   ஆராய்ந்து   நட்புக்  கொள்க.  ''அழச்
சொல்லி'',  ''இடித்து''  என  வந்த  பரிகார வினைகளான், அவற்றிற்கு
ஏற்ற   குற்றவினைகள்   வருவிக்கப்பட்டன.  வழக்கு  -  உலகத்தார்
அடிப்படச்  செய்து  போந்த  செயல்.  தம்மொடு நட்டாரும் அறியும்
வகை   அறிவித்தல்   அரிதாகலின்,   ''அறிய   வல்லார்''  என்றார்.
இரண்டாவது  இறுதிக்கண்  தொக்கது. கேட்டினும்  உண்டோர் உறுதி
கிளைஞரை  நீட்டி  அளப்பதோர் கோல். ஒருவனுக்குக் கேடு என்பது
தன்   நட்டாராகிய   புலங்களை  எஞ்சாமல்  அளப்பதோர்  கோல்;
ஆகலின்   அதன்கண்ணும்  அவனால்  பெறப்படுவதோர்  நல்லறிவு
உண்டு.  தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப்
புறத்துத்   தோன்றாமல்  போந்தார்,  பின்  கேடு  வந்துழிச்  செயல்
வேறுபடுதலின்,     அக்கேட்டால்     அவை    வரையறுக்கப்படும்
என்பதுபற்றிக்    கேட்டினைக்   கோலாக்கியும், அதனால்   அவரை
அளந்தறிந்தால்   ஆவாரையே   கோடலின்,  அவ்வறிவை  ''உறுதி''
என்றும்  கூறினார்.  கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம்.
இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார்
இவர்   என்பதூஉம்  கூறப்பட்டன.  ஊதியம்  என்ப  தொருவற்குப்
பேதையார்  கேண்மை  ஒரீஇ  விடல்.  ஒருவனுக்குப்  பேறு  என்று
சொல்லப்படுவது; அறிவிலாரோடு  நட்புக் கொண்டானாயின் அதனை
ஒழிந்து அவரின் நீங்குதல். நட்பு ஒழிந்தாலும் நீங்காக்கால் ''வெறிகமழ்
சந்தனமும்    வேங்கையும்    வே''    மாறு   போலத்  நாலடி.180
தீங்குவருதலின்  ''விடல்''  என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி
இருமை  இன்பத்திற்கு  உரிமை  எய்தலும்  உடைமையின், அதனை
''ஊதியம்''  என்றும்  கூறினார். உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்
கல்லல்கண்   ஆற்றறுப்பார்   நட்பு.  தம்  ஊக்கம் சுருங்குவதற்குக்
காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அது