திருக்குறள்
ஓலை எண் :   289

Zoom In NormalZoom Out

போலத்     தமக்கு ஒரு துன்பம் வந்துழிக்  கைவிடுவார்  நட்பினைக்
கொள்ளாதொழிக.  உள்ளம்  சிறுகுவ  ஆவன,  தம்மின் வலியாரோடு
தொடங்கியனவும்    பயனில்லனவும்    ஆம்.    ''ஆற்று''   என்பது
முதனிலைத்  தொழிற்  பெயர்.  முன்னெல்லாம் வலியராவார் போன்று
ஒழிதலின்,  ''ஆற்று  அறுப்பார்''  என்றார்.  எடுத்துக்காட்டு  உவமை.
கொள்ளின்  அழிந்தேவிடும்  என்பதாம்.  கெடுங்காலைக் கைவிடுவார்
கேண்மை   அடுங்காலை   உள்ளினும்   உள்ளம்   சுடும்.  ஒருவன்
கெடுங்காலத்து  அவனை  விட்டு  நீங்குவார் முன் அவனோடு செய்த
நட்பு;   தன்னைக்   கூற்று  அடுங்காலத்து  ஒருவன்  நினைப்பினும்,
அந்நினைத்த    உள்ளத்தைச்    சுடும்.   நினைத்த   துணையானே
இயைபில்லாத   பிறனுக்கும்  கூற்றினுங்  கொடிதாம்  எனக்  கைவீடு
எண்ணிச்செய்த  நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, ''அவன் தானே
ஆக்கிய  கேடு  தன்னை  அடுங்காலை  உள்ளினும், அக்கேட்டினும்
சுடும்''.   என்று  உரைப்பாரும்  உளர்.  இவை  மூன்று பாட்டானும்
ஆராய்ந்தால்  நட்கப்படாதார்  இவர் என்பது  கூறப்பட்டது. மருவுக
மாசற்றார்  கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. உலகோடு
ஒத்துக்  குற்றமற்றார் நட்பினையே  பயில்க; உலகோடு ஒத்தலில்லார்
நட்பினை அறியாது கொண்டாராயின், அவர்  வேண்டியதொன்றனைக்
கொடுத்தாயினும்  விடுக. உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும்
பயத்தலின்,   ''மருவுக''  என்றும்,  அதனோடு  மாறாயினார்  நட்புத்
துன்பமே  பயத்தலின்,  அதன் ஒழிவை ''விலை கொடுத்தும் கொள்க''
என்றும்    கூறினார்.    இதனான்    அவ்விருமையும்  தொகுத்துக்
கூறப்பட்டன. அஃதாவது, நட்டாரது