பழையராந்தன்மை பற்றி
அவர் பிழைத்தன பொறுத்தல், காரணப் பெயர்
காரியத்திற்கு ஆயிற்று, ஆராய்ந்து
நட்கப்பட்டார் எனினும் பொறுக்கப் படும்
குற்றமுடை யராகலானும் ஊழ்வகையானும் நட்டார் மாட்டுப்
பிழையுளதாம் என்பது அறிவித்தற்கு, இது
நட்பு ஆராய்தலின் பின் வைக்கப்பட்டது. பழைமை
எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; அது
பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ''கிழமை'' ஆகுபெயர். ''கெழுதகைமை'' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை
செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், ''பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு'' என்பது கூறப்பட்டது. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர்
கடன். நட்பிற்கு அவயவமாவன நட்டார்
உரிமையால் செய்வன; அதனால் அவ்வுரிமைக்கு
இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. வேறன்மை தோன்ற
''உறுப்பு'' என்றார்.
உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக
வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர்
என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை. தாம் உடம்படாதனவேனும்
நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத்
தாம் செய்தாற் போல உடம்படாராயின்; அவரோடு
பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?
செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் |