அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு
பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான் கேளாது நட்டார் செயின். தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை
விரும்புவர் அறிவுடையார். ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின்,
அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். ''வேண்டியிருப்பார்'' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. ''ஒன்றோ'' என்பது எண்ணிடைச்சொல். ''செயின்'' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை
யாவர்க்கும்
உண்மையின்
தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல்,
ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை
மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல்
கொள்வதல்லது. அன்பின்மையென்று
கொள்ளப்படாது என்பதாம். கெடும்
வகை செய்யின் அதற்குக் காரணம்
இதனான் கூறப்பட்டது. எல்லைக்கண் நின்றார்
துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார்
தொடர்பு. நட்பு வரம்பு இகவாது அதன் |