திருக்குறள்
ஓலை எண் :   292

Zoom In NormalZoom Out

கண்ணே     நின்றவர்; தம்மொடு பழைமையின் திரியாது  நின்றாரது
நட்பினை  அவரால்  தொலைவு வந்தவிடத்தும் விடார். பழைமையின்
திரியாமை   -  உரிமையொழியாமை.  தொலைவு  -  பொருட்கேடும்
போர்க்கேடும்.  அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்  வழிவந்த
கேண்மை    யவர்.    நட்டார்    தமக்கு   அழிவு   வந்தவற்றைச்
செய்தாராயினும்   அவர்   மாட்டு   அன்பு  ஒழியார்;  அன்புடனே
பழையதாய்  வந்த நட்பினை உடையார். ''அழி''  என்பது முதனிலைத்
தொழிற்பெயர்.  அழிவு  -  மேற்சொல்லிய  கேடுகள். இவை இரண்டு
பாட்டானும்  கேடு  செய்தக்கண்ணும்  நட்பு  விடற்பாற்றன்று என்பது
கூறப்பட்டது.   கேள்இழுக்கம்  கேளாக்  கெழுதகைமை  வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின். நட்டார் செய்த பிழையைத் தாமாகவே
யன்றிப்  பிறர்  சொன்னாலும்  கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு;
அவர்  பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.  பிழையாவன:
சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை,அஞ்சாமை  முதலாயின.
கேட்டல்   -   உட்கோடல்.  ''கெழுதகைமைவல்லார்''  என்பது  ஒரு
பெயராய்,  ''கேளாத''  என்னும்  எச்சத்திற்கு  முடிபாயிற்று.   செய்து
போந்துழியல்லது   அவ்வுரிமை   வெளிப்படாமையின்,   செய்யாதன
நாளல்லவாயின.  இதனான்  பிழை பொறுத்தற்  சிறப்புக் கூறப்பட்டது.
கெடாஅ  வழிவந்த  கேண்மையார்  கேண்மை  விடாஅர்  விழையும்
உலகு.  உரிமை  அறாது  பழையதாய்  வந்த  நட்பினை உடையாரது
நட்பினை;  அவர்  பிழை  நோக்கி  விடுதல்  செய்யாதாரை  உலகம்
நட்புக்குறித்து    விரும்பும்.    ''கெடாது''   என்பதன்   இறுதிநிலை
விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம்