திருக்குறள்
ஓலை எண் :   384

Zoom In NormalZoom Out

மையான்  அவற்றை   மிகுதிக்கண்   மேற்சென்று    இடிக்கமாட்டா''
வாயின  என்பதுபட  நின்றமையின்,  மன்   ஒழியிசைக்கண்  வந்தது.
கடாஅக்  களிற்றின்மேல் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்.
இம்  மாதர்  படாமுலைகளின்  மேலிட்ட துகில்; அவை கொல்லாமல்
காத்தலின்  கொல்வதாய  மதக்களிற்றின்  மேலிட்ட  முகபடாத்தினை
ஒக்கும்.  கண்ணை மறைத்தல் பற்றிக் ''கட்படாம்'' என்றான். துகிலான்
மறைத்தல்   நாணுடை   மகளிர்க்கு   இயல்பாகலின்,  அத்துகிலூடே
அவற்றின்       வெம்மையும்         பெருமையும்        கண்டு
இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக்  கருதிப்
''படாமுலை''  என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும்
என்பது  தோன்ற  நின்றது. ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும்   உட்கும்என்   பீடு.   போர்க்களத்து   வந்து  நேராத
பகைவரும்  நேர்ந்தார்வாய்க்  கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி;
இம்மாதரது  ஒள்ளிய  நுதலொன்றற்குமே  அழிந்து விட்டது. ''மாதர''்
என்பது   அதிகாரத்தான்   வந்தது.   ''ஞாட்பினுள்''    என்றதானல்,
பகைவராதல் பெற்றாம்.. ''பீடு'' என்ற பொதுமையான் மனவலியும் காய
வலியும் கொள்க. ''ஓ'' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது
பெருமையும்   நுதலது  சிறுமையும்  தோன்ற  நின்றது.  கழிந்ததற்கு
இரங்கலின்,   தற்புகழ்தல்   அன்றாயிற்று.  பிணைஏர்  மடநோக்கும்
நாணும்  உடையாட்  கணிஎவனோ  ஏதில தந்து.  அணிகலத்தானாய
வருத்தம்  கூறியது.  புறத்து  மான்  பிணை ஒத்த மடநோக்கினையும்
அகத்து  நாணினையும்  உடையாளாய  இவட்கு;  ஒற்றுமை  உடைய
இவ்வணிகளே    அமைந்திருக்க   வேற்றுமையுடைய   அணிகளைப்
படைத்து    அணிதல்    என்ன    பயனுடைத்து?    மடநோக்கு -
வெருவுதல்உடைய    நோக்கு.   ''இவட்குப்   பாரமாதலும்   எனக்கு
அணங்காதலும்  கருதாமையின்,  அணிந்தார்  அறிவிலர்''  என்பதாம்.
உண்டார்கண்  அல்ல தடுநறாக்  காமம்போல் கண்டார் மகிழ்செய்தல்
இன்று.  தலைமகள்  குறிப்பறிதல்  உற்றான்  சொல்லியது. அடப்படும்
நறா, தன்னை