யது. புறத்து நொதுமலர்
போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; அகத்துச்
செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். கடுஞ்சொல் என்பது, ''இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்'' என்றல்
முதலாயின. ''செறார்'' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு. இதுவும் அது. பின் இனிதாய் முன் இன்னாதாய
சொல்லும்; அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம். அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது. என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு
உண்டு. ஏர்: ஆகுபெயர். ''அக்குறிப்பு இனிப் பழுதாகாது'' என்பதாம்.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார்
கண்ணே யுள. தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது முன்னறியாதார் போல ஒருவரையொருவர்
பொதுநோக்கத்தான்
நோக்குதல்; இக்காதலையுடையர்
கண்ணே உளவாகாநின்றன. பொது நோக்கு: யாவர் மாட்டும் ஒரு
தன்மைத்தாய |