திருக்குறள்
ஓலை எண் :   388

Zoom In NormalZoom Out

நோக்குதல்     தொழில்      ஒன்றேயாயினும்,   இருவர்கண்ணும்
நிகழ்தலானும்,  ஒருவர்கண்தானும்  குறிப்பு வேறுபாட்டால்  பலவாம்
ஆகலானும்,  ''உள'' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் ''மது
மறைந்துண்டார்    மகிழ்ச்சிபோல    உள்ளத்துள்ளே   மகிழ்தலின்''
இறையனார்-8   அதுபற்றிக்   ''காதலார்''   என்றும்,   அது  புறத்து
வெளிப்படாமையின் ''ஏதிலார் போல'' என்றும் கூறினாள். கண்ணோடு
கண்ணிணை  நோக்கொக்கின்  வாய்ச்சொற்கள்  என்ன  பயனும் இல.
இதுவும்  அது  காமத்திற்கு  உரிய  இருவருள்  ஒருவர் கண்களோடு
ஒருவர்  கண்கள்  நோக்கால்  ஒக்குமாயின்;  வாய்ச்சொற்கள்  என்ன
பயனும்   இல   -   அவர்   வாய்மை   தோன்றச்   சொல்லுகின்ற
வாய்ச்சொற்கள்  ஒரு  பயனும்  உடைய  அல்ல.  நோக்கால் ஒத்தல்:
காதல்   நோக்கினவாதல்.  வாய்ச்  சொற்கள்:  மனத்தின்கண்  இன்றி
வாயளவில்   தோன்றுகின்ற  சொற்கள்.  இருவர்  சொல்லும்  கேட்டு
உலகியல்மேல்  வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன:  அவள்
புனங்காவல்  மேலும்,  அவன்  வேட்டத்தின்  மேலும்   சொல்லுவன.
பயனில்  சொற்களாகலின்,  இவை  கொள்ளப்படா  என்பதாம். இவை
புணர்தல்  நிமித்தம்.  அஃதாவது, அங்ஙனம்  குறிப்பறிந்து  புணர்ந்த
தலைமகன்    அப்புணர்ச்சியினை    மகிழ்ந்து    கூறல்   .அதிகார
முறைமையும்   இதனானே   விளங்கும்.   கண்டுகேட்   டுண்டுயிர்த்
துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. இயற்கைப் புணர்ச்சி
இறுதிக்கண்  சொல்லியது.  கண்ணால்  கண்டும் செவியால்  கேட்டும்
நாவால்   உண்டும்   மூக்கால்   மோந்தும்   மெய்யால்   தீண்டியும்
அனுபவிக்கப்படும்  ஐம்புலனும்; இவ்வொள்ளிய தொடியை உடையாள்
கண்ணே   உளவாயின.   உம்மை,   முற்று உம்மை,  தேற்றேகாரம்:
வேறிடத்து  இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு
வேறு  பொருள்களான்  அனுபவிக்கப்படுவன  ஒரு  காலத்து  இவள்
கண்ணே அனுப