திருக்குறள்
ஓலை எண் :   389

Zoom In NormalZoom Out

விக்கப்பட்டன   என்பதாம்.  வடநூலார்   இடக்கர்ப்  பொருளவாகச்
சொல்லிய  புணர்ச்சித்  தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை  தன்நோய்க்குத் தானே மருந்து.
இடந்தலைப்  பாட்டின்கண்  சொல்லியது வாதம்  முதலிய பிணிகட்கு
மருந்தாவன      அவற்றிற்கு      நிதானமாயினவன்றி     மாறாய
இயல்பினையுடையனவாம்;     அவ்வாறன்றி    இவ்வணியிழையினை
உடையாள்   தன்னினாய   பிணிக்கு   மருந்தும்   தானேயாயினாள்.
இயற்கைப்  புணர்ச்சியை  நினைந்து  முன்  வருந்தினான்  ஆகலின்
''தன்நோய்'' என்றும்,  அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத்,
தீர்ந்தானாகலின்  ''தானே  மருந்து'' என்றும்  கூறினான். இப்பிணியும்
எளியவாயவற்றால்  தீரப்பெற்றிலம்  என்பதுபட  நின்றமையின்,  மன்
ஒழியிசைக்   கண்   வந்தது.   தாம்வீழ்வார்  மென்றோள்  துயிலின்
இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. நிரதிசய இன்பத்திற்குரிய நீ
இச்சிற்றின்பத்திற்கு   இன்னையாதல்   தகாது   என்ற   பாங்கற்குத்
தலைவன்   சொல்லியது.   ஐம்புலன்களையும்  நுகர்வார்க்குத்  தாம்
விரும்பும்  மகளிர்  மெல்லிய  தோளின்கண்  துயிலும்  துயில் போல
வருந்தாமல்  எய்தலாமோ;  அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும்
செங்கண்மால்  உலகம்.  ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர்
அவாய்   நிலையான்  வந்தது.  ''இப்பெற்றித்தாய  துயிலை  விட்டுத்
தவயோகங்களான்  வருந்த  வேண்டுதலின்,  எம்மனோர்க்கு ஆகாது''
என்னும்  கருத்தால், ''இனிதுகொல்'' என்றான். இந்திரன் உலகு என்று
உரைப்பாரும்   உளர்.   தாமரைக்கண்ணான்  என்பது  அவனுக்குப்
பெயரன்மையின்,   அஃது   உரையன்மையறிக.  நீங்கின்  தெறூஉம்
குறுகுங்கால்  தண்என்னும்  தீயாண்டுப்  பெற்றாள்  இவள்.  பாங்கற்
கூட்டத்து   இறுதிக்கண்  சொல்லியது.  தன்னை  அகன்றுழிச்  சுடா
நிற்கும்,  அணுகுழிக்  குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; என்கண்
தருதற்கு  இவள்  எவ்வுலகத்துப் பெற்றாள். கூடாமுன் துன்புறுதலின்
''நீங்கின் தெறூஉம்'' என்றும், கூடியபின் இன்புறுதலின், ''குறுகுங்கால்
தண்   என்னும்''   என்றும்,  இப்பெற்றியதோர்   தீ   உலகத்துக்கு
இல்லையாமாகலின்  ''யாண்டுப் பெற்றாள்''  என்றும் கூறினான். தன்
காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக்