திருக்குறள்
ஓலை எண் :   390

Zoom In NormalZoom Out

கூறினான்,   அவளான்  அது  வெளிப்படுதலின்.  வேட்ட பொழுதின்
அவையவை  போலுமே  தோட்டார்  கதுப்பினாள்  தோள். தோழியிற்
கூட்டத்து  இறுதிக்கண்  சொல்லியது மிக இனியவாய  பொருள்களைப்
பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண்  அவையவை
தாமே   வந்து   இன்பஞ்செய்யுமாறு   போல   இன்பஞ்   செய்யும்;
எப்பொழுதும்   பெற்றுப்  புணரினும்,  பூவினை அணிந்த   தழைத்த
கூந்தலின்     யுடையாள்     தோள்கள்.    தோடு:    ஆகுபெயர்.
இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே
நிகழ்ந்திருக்க,   பின்னரும்   புதியவாய்   நெஞ்சம்    பிணித்தலின்,
அவ்வாராமை  பற்றி  இவ்வாறு  கூறினான். தொழிலுவமம்.  உறுதோ
றுயிர்தளிர்ப்பத்  தீண்டலால்  பேதைக்   கமிழ்தின் இயன்றன தோள்.
இதுவும் அது. தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும்
தளிர்க்கும்    வகை   தீண்டுதலான்;   இப்பேதைக்குத்   தோள்கள்
தீண்டப்படுவதோர்   அமிழ்தினால்   செய்யப்பட்டன.  ஏதுவாகலான்
தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி,
''அவை  அமிழ்தின்  இயன்றன'' என்றான்.  தளிர்த்தல் - இன்பத்தால்
தழைத்தல்.  தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை
முயக்கு.  இவளை  நீ  வரைந்துகொண்டு உலகோர்  தம் இல்லிருந்து
தமது   பாத்துண்ணும்   இல்லறத்தோடு   படல்   வேண்டும்  என்ற
தோழிக்குச்  சொல்லியது அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது
முயக்கம்;  இன்பம்  பயத்தற்கண்  தமக்குரிய  இல்லின்கண்  இருந்து
உலகோர்  தம்தாளான்  வந்த  பொருளைத் தென்புலத்தார்  தெய்வம்
விருந்து  ஒக்கல்கட்குப்  பகுத்துத்  தம்  கூற்றை  உண்டாற் போலும்.
தொழில்  உவமம்.  ''இல்லறஞ்செய்தார்  எய்தும்  துறக்கத்து  இன்பம்
எனக்கு   இப்புணர்ச்சியே   தரும்''   என   வரைவு   உடன்படான்
கூறியவாறாயிற்று  வீழும் இருவர்க் கினிதே வளிஇடை போழப் படாஅ
முயக்கு. ஒத்த அன்