மாட்டுக் காதல்.
களவொழுக்கத்திற் பல
இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின்,
''செறிதோறும்'' என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு
அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது
எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது
கூற்றான் நிகழாமை அறிக. அஃதாவது,
தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது. இது,
புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின், புணர்ச்சி மகிழ்தலின் பின்
வைக்கப்பட்டது. நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும் மெல்நீரள் யாம்வீழ்
பவள். இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.
அனிச்சப்பூவே, வாழ்வாயாக,
மென்மையால் நீ
எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை;
அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும்
மெல்லிய இயற்கையை
உடையவள். அனிச்சம்: ஆகுபெயர், ''வாழி'' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி ''யானே மெல்லியள்'' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம்.
அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான், ''இன்னீரள்'' என்று பாடம் ஓதுவாரும் உளர். மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது. நெஞ்சே; யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; தாமரை குவளை
நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்,
நின்அறிவு இருந்தவாறென்? மையாத்தல்: ஈண்டு
ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக்
கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல்
என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி
நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப்
பெறாமையின் அவற்றோ |