திருக்குறள்
ஓலை எண் :   393

Zoom In NormalZoom Out

டு     ஒருபுடையொக்கும்      மலர்களைக்      கண்டுழியெல்லாம்
அவற்றின்கண்    காதல்    செய்து   போந்தான்,   இது   பொழுது
அக்கண்களின்  நலம்  முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு
அனுபவித்தானாகலின்,   அம்மலர்கள்  ஒவ்வாமை  கண்டு,  ஒப்புமை
கருதிய  நெஞ்சை  இகழ்ந்து  கூறியவாறு. முறிமேனி முத்தம் முறுவல்
வெறிநாற்றம்   வேல்உண்கண்   வேய்த்தோ  ளவட்கு.  கூட்டுதலுற்ற
பாங்கற்குத்  தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது. வேய் போலும்
தோளினையுடையவட்கு;    நிறம்    தளிர்   நிறமாயிருக்கும்;   பல்
முத்தமாயிருக்கும்;    இயல்பாய    நாற்றம்    நறுநாற்றமாயிருக்கும்;
உண்கண்கள்    வேலாயிருக்கும்   பெயரடையானும்   ஓர்   இயல்பு
கூறப்பட்டது.  முறி,  முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால்
கூறினமையின்,   புனைந்துரையாயிற்று,  ''நின்னாற்  கருதப்பட்டாளை
அறியேன்''    என்று     சேண்படுத்த    தோழிக்குத்    தலைமகன்
சொல்லியதூஉம்  ஆம்.  காணின்  குவளை கவிழ்ந்து  நிலன்நோக்கும்
மாணிழை    கண்ஒவ்வேம்   என்று.   பாங்கற்கூட்டத்துச்    சென்று
சார்தலுறுவான்  சொல்லியது.  குவளைப்  பூக்கள்  தாமும்;  காண்டல்
தொழிலையுடையவாயின்;  மாண்ட இழையினை  உடையாள் கண்களை
யாம்  ஒவ்வேம்  என்று  கருதி அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை
நோக்கும்.   பண்பானேயன்றித்   தொழிலானும்  ஒவ்வாது  என்பான்,
''காணின்''என்றும்,  கண்டால்  அவ்வொவ்வாமையால்  நாணுடைத்தாம்
என்பது  தோன்றக் ''கவிழ்ந்து'' என்றும் கூறினான். காட்சியும்  நாணும்
இன்மையின்  செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.  அனிச்சப்பூக்
கால்களையாள்    பெய்தாள்   நுசுப்பிற்கு   நல்ல   படாஅ   பறை.
பகற்குறிக்கண்  பூ  அணி  கண்டு சொல்லியது. இவள் தன்  மென்மை
கருதாது  அனிச்சப்பூவை  முகிழ்  களையாது சூடினாள்; இனி  இவள்
இடைக்கு  நல்ல பறைகள் ஒலியா. அம் ''முகிழ்ப்பாரம் பொறாமையின்
இடை    முரியும்.    முரிந்தால்,   அதற்குச்   செத்தார்க்கு  உரிய
நெய்தற்பறையே படுவது'' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை
படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன. மதியும்
மடந்தை  முகனும்  அறியா  பதியின் கலங்கிய மீன். இரவுக்குறிக்கண்
மதி கண்டு சொல்லியது. வானத்து மீன்கள்; வேறு