திருக்குறள்
ஓலை எண் :   394

Zoom In NormalZoom Out

பாடு  பெரிதாகவும்  தம்  மதியினையும்  எம்மடந்தை முகத்தினையும்
இதுமதி,  இதுமுகம்  என்று  அறியமாட்டாது;  தம்   நிலையினின்றும்
கலங்கித் திரியா நின்றன. ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல்
பற்றிப்  ''பதியிற் கலங்கிய'' என்றான். வேறுபாடு, வருகின்ற  பாட்டால்
பெறப்படும்.   இனி   ''இரண்டனையும்  பதியிற்  கலங்காத  மீன்கள்
அறியுமல்லது    கலங்கின   மீன்கள்   அறியா''    என்றுரைப்பினும்
அமையும்.  அறுவாய்  நிறைந்த  அவிர்மதிக்குப் போல மறுஉண்டோ
மாதர்  முகத்து.  இதுவும் அது. அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக்
காரணம்  யாது?  முன்  குறைந்த  இடம் வந்து நிரம்பியே விளங்கும்
மதிக்கண்  போல;  இம்மாதர் முகத்து மறு உண்டோ? இடம் - கலை,
மதிக்கு   என்பது   வேற்றுமை   மயக்கம்.  தேய்தலும்   வளர்தலும்
மறுவுடைமையும்  இன்மை  பற்றி  வேறுபாடறியலாயிருக்க  அறிந்தில
என  இகழ்ந்து  கூறியவாறு. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை    வாழி   மதி.   இதுவும்   அது.   மதியே   வாழ்வாயாக;
இம்மாதர்முகம்  போல  யான் மகிழும் வகை ஒளிவீச  வல்லையாயின்,
நீயும் என் காதலையுடையையாதி ''மறு உடைமையின்  அது மாட்டாய்;
மாட்டாமையின்  என்னால்  காதலிக்கவும்படாய்'',  என்பதாம். ''வாழி''
இகழ்ச்சிக்   குறிப்பு.  மலர்அன்ன  கண்ணாள்  முகம்ஒத்தி   யாயின்
பலர்காணத்  தோன்றல் மதி. இதுவும் அது. மதியே; இம்மலர் போலும்
கண்ணையுடையாள்  முகத்தை  நீ  ஒக்க வேண்டுதியாயின்; இதுபோல
யான்   காணத்   தோன்று;  பலர்  காணத்  தோன்றாதொழி.  தானே
முகத்தின்  நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின்,  ஈண்டும்,
பலர்  காணத்தோன்றலை  இழித்துக்  கூறினான்.  தோன்றின் நினக்கு
அவ்வொப்பு   உண்டாகாது  என்பதாம்.  அனிச்சமும்   அன்னத்தின்
தூவியும்  மாதர்  அடிக்கு நெருஞ்சிப் பழம். உடன் போக்கு உரைத்த
தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.