திருக்குறள்
ஓலை எண் :   395

Zoom In NormalZoom Out

உலகத்தாரான்    மென்மைக்கு    எடுக்கப்பட்ட    அனிச்சப்பூவும்
அன்னப்புள்ளின்  சிறகும்  ஆகிய இரண்டும்; மாதரடிக்கு நெருஞ்சிப்
பழம்போல  வருத்தஞ்  செய்யும்.  முன் வலிதாதலுடைமையின் பழம்
என்றான்.    இத்தன்மைத்தாய    அடி    ''பாத்திஅன்ன   குடுமிக்
கூர்ங்கற''்களையுடைய     அகநா.களிற்.5வெஞ்சுரத்தை    யாங்ஙனம்
கடக்கும்''?  என்பது  குறிப்பாற் பெறப்பட்டது.  செம்பொருளேயன்றிக்
குறிப்புப்     பொருளும்     அடிநலனழியாமையாகலின்,    இதுவும்
இவ்வதிகாரத்ததாயிற்று.  அஃதாவது,  தலைமகன் தன் காதல்  மிகுதி
கூறலும்,  தலைமகள்  தன்  காதல்  மிகுதி   கூறலும்  ஆம்.   இது,
புணர்ச்சியும்  நலனும்  பற்றி  நிகழ்வதாகலின்,  புணர்ச்சி   மகிழ்தல்,
நலன்  புனைந்து  உரைத்தல்களின்  பின்  வைக்கப்பட்டது. பாலொடு
தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர். இயற்கைப்புணர்ச்சி
இறுதிக்கண்  தலைமகன்  தன்  நயப்பு  உணர்த்தியது.  இம்மெல்லிய
மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலுடனே தேனைக்
கலந்த   கலவை   போலும்.   ''கலந்தற்று''  என்பது  விகாரமாயிற்று;
கலக்கப்பட்டது  என்றவாறு. ''பாலொடு தேன்'' என்ற அதனால் அதன்
சுவை  போலுஞ்  சுவையினை  உடைத்து என்பதாயிற்று.  ''எயிறூறிய''
என  இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு
வேறறியப்பட்ட  சுவையவாய  பாலும்  தேனும்  கலந்துழி அக்கலவை
இன்னது   என்று   அறியலாகாத  இன்சுவைத்தாம்  ஆகலின்,  அது
பொருளாகிய  நீர்க்கும்  எய்துவிக்க.  உடம்பொ  டுயிரிடை என்னமற்
றன்ன   மடந்தையொ  டெம்மிடை  நட்பு.  பிரிவு  அச்சம்  கூறியது.
உடம்பொடு    உயிரிடை    உளவாய    நட்புக்கள்   எத்தன்மைய?
அத்தன்மைய;  இம்மடந்தையோடு  எம்மிடை  உளவாய   நட்புக்கள்.
''என்ன''?  எனப்  பன்மையாற்  கூறியது,  இரண்டும் தொன்றுதொட்டு
வேற்றுமையின்றிக்    கலந்து    வருதல்,   இன்பதுன்பங்கள்   ஒக்க
அனுபவித்தல்,  இன்றியமையாமை  என்றிவற்றை  நோக்கி.  தெய்வப்
புணர்ச்சியாகலான்,   அதுபொழுது  உணர்ச்சியிலள்  ஆகியாள் பின்
உடை