திருக்குறள்
ஓலை எண் :   397

Zoom In NormalZoom Out

யின.  இத்துணையும்  தலைமகன்  கூற்று,  மேல்   தலைமகள்  கூற்று.
கண்ணுள்ளின்  போகார்  இமைப்பின்  பருவரார்  நுண்ணியர்எங் காத
லவர்.  ஒருவழித்தணப்பின்கண்  தலைமகனைத் தோழி  இயற்பழிக்கும்
என்று  அஞ்சி  அவள்  கேட்பத்  தன்னுள்ளே  சொல்லியது.   தாம்
காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார்  கருதுக,
எம்முடைய   காதலர்  எம்  கண்ணகத்து  நின்றும்  போகார்;   யாம்
அறியாது   இமைத்தேமாயின்   அதனால்   வருந்துவதும்   செய்யார்;
ஆகலான்    காணப்படா   நுண்ணியர்.   இடைவிடாத    நினைவின்
முதிர்ச்சியான்  எப்பொழுதும்  முன்னே தோன்றலின்   ''கண்ணுள்ளின்
போகார்''  என்றும்,  இமைத்துழியும்  அது  நிற்றலான்    ''இமைப்பின்
பருவரார்''  என்றும் கூறினாள். கண்உள்ளார் காத லவராகக்  கண்ணும்
எழுதேம்  கரப்பாக் கறிந்து. இதுவும் அது. காதலர் எப்பொழுதும்  எம்
கண்ணின்    உள்ளார்   ஆகலான்,   கண்ணினை    அஞ்சனத்தால்
எழுதுவதும்  செய்யேம்;  அத்துணைக்  காலமும்  அவர்   மறைதலை
அறிந்து.  இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. ''கரப்பாக்கு''  என்பது
வினைப்பெயர்.  வருகின்ற ''வேபாக்கு'' என்பதும் அது. ''யான்   இடை
ஈடின்றிக்  காண்கின்றவரைப்  பிரிந்தார் என்று கருதுமாறு  என்னை''?
என்பது  குறிப்பெச்சம்.  நெஞ்சத்தார்  காத  லவராக  வெய்துண்டல்
அஞ்சுதும்    வேபாக்   கறிந்து.   இதுவும்   அது.   காதலர்   எம்
நெஞ்சினுள்ளார்   ஆகலான்   உண்ணுங்கால்  வெய்தாக  உண்டலை
அஞ்சாநின்றேம்;    அவர்    அதனான்    வெய்துறலை   அறிந்து.
''எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார்  என்று
கருதுமாறென்னை''?  என்பது  குறிப்பெச்சம்.   இமைப்பின்  கரப்பாக்
கறிவல்   அனைத்திற்கே   எதிலர்  என்னும்இவ்  வூர்.  வரைவிடை
வைத்துப்   பிரிவின்கண்   தலைமகளாற்றுதற்   பொருட்டுத்  தோழி
தலைமகனை  இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.  என்கண்
இமைக்குமாயின்   உள்ளிருக்கின்ற   காதலர்   மறைதலை   அறிந்து
இமையேன்;   அவ்வளவிற்கு   அவரைத்   துயிலா   நோய்செய்தார்
அன்பிலர்  என்று  சொல்லாநிற்கும் இவ்வூர். தன் கருத்து அறியாமை
பற்றிப்  புலந்து  சொல்லுகின்றாள்  ஆகலின், தோழியை வேறுபடுத்து,
''இவ்வூர்'' என்றாள். ''ஒரு பொழுதும்'' பிரியாதவரைப் பிரிந்