தார் என்று பழிக்கற்பாலையல்லை'',
என்பதாம். உவந்துறைவர் உள்ளத்துள்
என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர். இதுவும் அது. காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ''உவந்து உறைவர்'' என்றதனால் அன்புடைமை கூறினாள். ''பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை'' என்பதாம். அஃதாவது, சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன்
தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும்,
அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம். இது காதல் மிக்குழி நிகழ்வது
ஆகலின், காதற்சிறப்புஉரைத்தலின் பின் வைக்கப்பட்டது. காமம் உழந்து வருந்தினார்க் கேமம் மடல்அல்ல தில்லை வலி. சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது. அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது,
இனி எனக்கு வலியாவதில்லை. ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். ''பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது
அல்லாமையை அறிந்தேன் ஆகலான்,
இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்'', என்பது கருத்து. நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும் நாணினை நீக்கி நிறுத்து. ''நாணுடைய நுமக்கு அது முடியாது'', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ''வருந்தினார்க்கு'' என மேல் வந்தமையின்,
செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். ''நீக்கி நிறுத்து'' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், ''உடம்பும் உயிரும்''
என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. ''மடலேறும்'' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் |