யிலும் இடையாமத்தும்
யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ''பேதை'' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. ''இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா'' என்பதாம். கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணின் பெருந்தக்க தில். ''பேதைக்கு என் கண் படல் ஒல்லா'',
என்பது பற்றி ''அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய
ஆடவரன்றே ஆற்றற்பாலர்'', என்றாட்குச் சொல்லியது. கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ''பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை'', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று. நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது. இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மிகவும்
அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது;
கமகளிர் காமமும் அவர் மறைத்தலைக்
கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.
''என்னாது'' என்பது முன்னும் கூட்டி
மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை
விகாரத்தால் தொக்கது. ''மன்று'' என்பது தந்தை
தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. இதுவும் அது. யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் -
அலராதல், ''அம்பலும் அலருமாயிற்று''. இனி
''அறத்தொடு நிற்றல் வேண்டும்'', |