திருக்குறள்
ஓலை எண் :   402

Zoom In NormalZoom Out

தூற்றாது   ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா
தொழிகின்றது  தெய்வத்தான்,''  என்றும்  கூறினான்.  முற்று உம்மை
விகாரத்தால்  தொக்கது.  மலர்அன்ன  கண்ணாள்  அருமை  அறியா
தலர்எமக்    கீந்ததிவ்    வூர்.    இதுவும்    அது.   மலர்போலும்
கண்ணையுடையாளது  எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அவளை
எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. அருமை:
அல்ல   குறிப்பாட்டானும்   இடையீடுகளானும்   ஆயது.   ''ஈந்தது''
என்றான்,  தனக்குப்  பற்றுக்கோடாகலின்,  அலர்  கூறுவாரை அவர்
செய்த   உதவி  பற்றி ''இவ்வூர்''  என்றான்.  உறாஅதோ  ஊரறிந்த
கௌவை?  அதனைப்  பெறாஅது  பெற்றன்ன நீர்த்து. இதுவும் அது.
எங்கட்குக்  கூட்டம்  உண்மை  இவ்வூர் அறிதலான் விளைந்த அலர்
எனக்கு    உறுவதொன்றன்றோ;    அது    கேட்ட    என்  மனம்
அக்கூட்டத்தைப்  பெறாதிருந்தே  பெற்றாற்போலும்  நீர்மையுடைத்து
ஆகலான்.  பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம்  போலும்
இன்பமுடைமை.   ''நீர்த்து''    என்பதற்கு  ஏற்ற  ''மனம்''   என்னும்
வினைமுதல்   வருவிக்கப்பட்டது.   கவ்வையால்    கவ்விது  காமம்
அதுஇன்றேல்  தவ்வென்னும்  தன்மை   இழந்து.  இதுவும் அது என்
காமம்  இவ்வூர்  எடுக்கின்ற  அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று;
அவ்வலர்  இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். அலர்தல்:
மேன்மேல்   மிகுதல்.   செவ்வையுடையதனைச்  செவ்விது  என்றாற்
போலக்  கவ்வையுடையதனைக்  ''கவ்விது'' என்றார். இயல்பு: இன்பம்
பயத்தல்,  ''தவ்வென்னும்''  என்பது குறிப்பு மொழி: ''நூல்கால் யாத்த
மாலை   வெண்குடை,   தவ்வென   றசைஇத்  தாழ்துளி  மறைப்ப''
நெடுநல். 184-85  என்புழியும்   அது.   களித்தொறும்  கள்ளுண்டல்
வேட்டற்றால்  காமம்  வெளிப்படுந்  தோறும்  இனிது. இதுவும் அது.
கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல;
எனக்குக்     காமம்     அலராந்தோறும்     இனிதாகா   நின்றது.
''வேட்கப்பட்டடற்றால்''   என்பது   ''வேட்டற்றால்''   என  நின்றது.
வேட்கை மிகுதியால் அலரும்