திருக்குறள்
ஓலை எண் :   405

Zoom In NormalZoom Out

தலைமகளை    ஒழித்து ''எனக்கு'' என்றாள், தான்  அவள்  என்னும்
வேற்றுமை   அன்மையின்.   அக்கால   மெல்லாம்   ஆற்றியிருந்து
அவ்வரவு    காணவல்லளல்லள்;    பிரிந்தபொழுதே    இறந்துபடும்
என்பதாம்.  அழுங்குவித்தல்:  பயன், இதனைத் தலைமகள் கூற்றாக்கி
உரைப்பாரும்  உளர்.  இன்கண்  உடைத்தவர்  பார்வல்  பிரி்வஞ்சும்
புன்கண்  உடைத்தால்  புணர்வு. பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த
தலைமகள்  தோழிக்குச்  சொல்லியது. தழையும் கண்ணியும் கொண்டு
பின்னின்ற    ஞான்று   அவர்   நோக்கு   மாத்திரமும்   புணர்ச்சி
குறித்தமையான்     நமக்கு     இன்பமுடைத்தாயிருக்கும்;    இன்று
அப்புணர்ச்சிதான்  நிகழா  நிற்கவும்  அது  பிரிவர்  என்று அஞ்சும்
அச்சத்தினை   உடைத்தாயிற்று;  அவர்  அன்பின்  நிலைமை  இது.
''பார்வல்''   என்றதனால்,   புணர்ச்சி   பெறாத   பின்னிலைக்காலம்
பெறப்பட்டது.   புன்கண்   என்னும்   காரணப்பெயர்   காரியத்தின்
மேலாயிற்று.    அவ்வச்சத்தினை   உடைத்தாதலாவது,   ''முள்ளுறழ்
முளையெயிற்று  அமிழ்தூறுந்  தீநீரைக்  -  கள்ளினும் மகிழ்செய்யும்
என    உரைத்தும்    அமையார்,   என்   ஒள்ளிழை   திருத்தும்''
கலித்-பாலை-3பண்டையிற்   சிறப்பால்.   அவன்  பிரிதிற்  குறிப்புக்
காட்டிஅச்சம்  செய்தலுடைமை.  அழுங்குவித்தல்:  பயன். அரிதரோ
தேற்றம்  அறிவுடையார்  கண்ணும்  பிரிவோர்  இடத்துண்மை யான்.
இதுவும்  அது. பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும்
அறிதலுடையராய  காதலர்  கண்ணும்; ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்;
அவர்   சொல்லும்  தலையளியும்  பற்றி  நம்மாட்டு  அன்புடையார்
எனத்தேறும்  தேற்றம்  அரிதாயிருந்தது. அரோ: அசைநிலை. உம்மை
உயர்வு   சிறப்பின்கண்  வந்தது.  அளித்தஞ்சல்  என்றவர்  நீப்பின்
தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு. இதுவும் அது. எதிர்ப்பட்ட
ஞான்றே  தலையளி  செய்து,  நின்னிற்  பிரியேன் அஞ்சல் என்றவர்
தாமே  பின் பிரிவாராயின்; அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை
மெய்யெனத்