திருக்குறள்
ஓலை எண் :   407

Zoom In NormalZoom Out

மகளிர்க்குத்     தம்    குறிப்பு   அறியும்    தோழியர்   இல்லாத
வேற்றூரின்கண்  வாழ்தல்  இன்னாது; அதன் மேலும் தம் காதலரைப்
பிரிதல்  அதனினும்  இன்னாது. தலைவன் செலவினை அழுங்குவித்து
வாராது  உடன்பட்டு  வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின்,  ''இனன்
இல்   ஊர்''   என்றாள்.   உலகியல்   கூறுவாள்  போன்று  தனக்கு
அவ்விரண்டும்   உண்மை   கூறியவாறு.   தொடின்சுடின்   அல்லது
காமநோய்  போல  விடின்சுடல் ஆற்றுமோ தீ. காமம் தீயே போன்று
தான்  நின்ற  இடத்தைச்  சுடுமாகலான்  நீ ஆற்றல் வேண்டும் என்ற
தோழிக்குச்    சொல்லியது.   தீத்தொடின்   சுடின்   சுடலல்லது  -
தீத்தன்னைத்    தொட்டாற்   சுடுமாயின்   சுடுதல்லது;   காமநோய்
போலவிடின்  சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை
அகன்றால்  தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. சுடுமாயின் என்பது,
மந்திர  மருந்துகளான்  தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு
அதுவும்   இல்லை  என்பாள்,  வாளா  ''சுடல்''  என்றாள்.  அகறல்:
நுகராமை.   ''சுடல்''  என்பது  முன்னும்  கூட்டப்பட்டது.  ''தீயினும்
கொடியதனை  யான்  ஆற்றுமாறு  என்னை''  என்பதாம். அரிதாற்றி
அல்லல்நோய்   நீக்கிப்  பிரிவாற்றிப்  பின்இருந்து  வாழ்வார்  பலர்.
தலைவியர்  பலரும்  பிரிவாற்றியிருப்பர்,  அது  நீ  செய்கின்றில்லை,
என்ற   தோழிக்குச்   சொல்லியது.   நீ   சொல்லுகின்றது   ஒக்கும்,
பிரிவுணர்த்திய   வழி   அதற்கு  உடம்பட்டுப்  பிரியுங்கால் நிகழும்
அல்லல்   நோயினையும்  நீக்கி;  பிரிந்தால்  அப்பிரிவு  தன்னையும்
ஆற்றிப்  பின்னும்  இருந்து  உயிர்  வாழும்மகளிர் உலகத்துப் பலர்.
பண்டையிற்     சிறப்பத்     தலையளி    பெற்று    இன்புறுகின்ற
எல்லைக்கண்ணே    அஃது   இழந்து   துன்புறுதற்கு   உடம்படுதல்
அரியதொன்றாகலின்,  ''அரியதனைச்  செய்து''   என்றும்,   ''செல்லுந்
தேயத்து   அவர்க்கு   யாது  நிகழும்''?  என்றும்   ''வருந்துணையும்
யாம்ஆற்றியிருக்குமாறு     என்''?     என்றும்,    ''அவ்வளவுதான்
எஞ்ஞான்றும்  வந்தெய்தும்''  என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை
மனத்து  நீங்காதாகலான்  ''அல்லல் நோய் நீக்கி'' என்றும், பிரிந்தால்
வருந்துணையும்   அகத்து   நிகழும்   காம   வேதனையும்,  புறத்து
''யாழிசை,மதி,   தென்றல்   என்றிவை   முதலாக   வந்து   இதனை
வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் ''பிரி