திருக்குறள்
ஓலை எண் :   408

Zoom In NormalZoom Out

வாற்றி''     என்றும்,   தம்   காதலரை  இன்றியமையா  ''மகளிருள்
இவையெல்லாம்   பொறுத்துப்   பின்னும்   இருந்துஉயிர்  வாழ்வார்
ஒருவரும்  இல்லை''  என்பது  குறிப்பால்  தோன்றப்  ''பின் இருந்து
வாழ்வார்     பலர்'' என்றும்     கூறினாள்.    ''அரிது''    என்பது
வினைக்குறிப்புப்பெயர்.    பிரிவின்கண்   நிகழ்வனவற்றைப்   பிரிவு
என்றாள்.   செய்து,   நீக்கி,   ஆற்றி   என்பன  ஓசை  வகையான்
அவ்வவற்றது  அருமையுணரநின்றன.  சிறப்பு  உம்மை  விகாரத்தால்
தொக்கது;  ''யானும்இறந்து  படுவல்'' என்பது கருத்து. அது,  படரான்
மெலிந்து   இரங்கல்   என   விரியும்.   அஃதாவது பிரிவாற்றாளாய
தலைமகள்,   தான்    உறுகின்ற     துன்பத்தினை   எப்பொழுதும்
நினைத்தலின்,      அந்நினைவான்      மெலிந்து      இரங்குதல்.
அதிகாரமுறைமையும்    இதனானே   விளங்கும்.    மறைப்பேன்மன்
யான்இஃதோ   நோயை   இறைப்பவர்க்  கூற்றுநீர்   போல  மிகும்.
காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச்
சொல்லிது. இந்நோயைப்  பிறரறிதல் நாணி யான் மறையா  நின்றேன்;
நிற்பவும்,  இஃது  அந்நாண்வரை  நில்லாது  நீர் வேண்டும்  என்று
இறைப்பவர்க்கு    ஊற்று    நீர்   மிகுமாறு   போல  மிகாநின்றது.
''அம்மறைத்தலால்  பயன்  என''்?  என்பதுபட நின்றமையின்,  ''மன்''
ஒழியிசைக்கண்  வந்தது.  ''இஃதோ  செல்வர்க்  கொத்தனென் யான்''
என்புழிப்  போல  ஈண்டுச்  சுட்டுப்  பெயர்  ஈறு  திரிந்து  நின்றது.
''இஃதோர் நோயை''என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை
அறிக.   ''இனி  அதற்கடுத்தது  நீ  செயல்  வேண்டும''்   என்பதாம்.
கரத்தலும்   ஆற்றேன்இந்   நோயைநோய்  செய்தார்க்  குரைத்தலும்
நாணுத்  தரும்.  ''ஈண்டையார்  அறியாமல் மறைத்தல்  ஆண்டையார்
அறியத்   தூது   விடுதல்   என்னும்  இரண்டனுள்  ஒன்று  செயல்
வேண்டும்''  என்ற  தோழிக்குச்  சொல்லியது.  இந்நோயை  ஈண்டை
அறியாமல்  மறைத்தலும்  வல்லேனாகின்றிலேன்;  ஆகாக்கால், நோய்
செய்தவர்க்கு  உரைக்க  எனின்,  அதுவும் எனக்கு நாணினைத் தாரா
நின்றது,  இனி  என்  செய்கோ?  ஒருகாலைக்கு  ஒருகால் மிகுதலின்,
''கரத்தலும் ஆற்றேன்'' என்றும்,