திருக்குறள்
ஓலை எண் :   409

Zoom In NormalZoom Out

சேயிடைச்     சென்றவர்க்கு இது சொல்லித்  தூதுவிட்டால் இன்னும்
இருந்தேன்  என்பது  பயக்கும்  என்னும் கருத்தால், ''நாணுத் தரும்''
என்றும்   கூறினாள். காமமும்  நாணும்  உயிர்காவாத்  தூங்கும்என்
நோனா  உடம்பி  னகத்து.  இதுவும்  அது.  காமநோயும்  அதனைச்
செய்தவர்க்கு   உரைக்கல்   ஒல்லாத   நாணும்;  தம்மைப்  பொறாத
என்னுடம்பின் கண்ணே; உயிர் காத்தண்டாக அதன் இரு  தலையிலும்
தூங்காநின்றன.   பொறாமை   மெலிவானாயது.  தூங்கும்   என்பது,
ஒன்றினொன்று  மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது.
''தூது  விடவும்  ஒழியவும்  பண்ணுவனவாய  காம நாண்கள் தம்முள்
ஒத்து  உயிரினை  இறுவியா  நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண்
நிற்கமாட்டாமையின்,   இஃது   இற்றே   விடும்''  என்பதாம். காமக்
கடல்மன்னும்   உண்டே   அதுநீந்தும்  ஏமப்  புணைமன்னும்  இல்.
தலைவியர்  காமக்கடற்  படார்,  படினும்,  அதனை ஏற்றபுணையான்
நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது. யாவர்க்கும் உளவாய்
வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே;
அதனை  நீந்தும்  அரணாகிய  புணை இல்லை. இருவழியும் மன்னும்
உம்மும்  அசைநிலை.  ''தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய்
நீயும ஆயிற்றிலை'' என்பது கருத்து. துப்பின் எவன்ஆவர் மன்கொல்
துயர்வரவு   நட்பினுள்  ஆற்று  பவர்.  தூது  விடாமை  நோக்கித்
தோழியோடு     புலந்து     சொல்லியது     இன்பஞ்செய்தற்குரிய
நட்பின்கண்ணே   துன்பவரவினைச்   செய்ய   வல்லவர்;   துன்பம்
செய்தற்குரிய   பகைமைக்கண்  என்  செய்வர்  கொல்லோ?  துப்புப்
பகையுமாதல்,    ''துப்பெதிர்ந்தோர்க்கே    யுள்ளாச்    சேய்மையன்
நட்பெதிர்ந்    தோர்க்கே    அங்கை    யண்மையன்''   புறநா.380
என்பதனானும்  அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், ''அவர்
செய்வது அறியப் பெற்றிலேம்'' என்பதுபட நின்ற