திருக்குறள்
ஓலை எண் :   410

Zoom In NormalZoom Out

மையின்,     மன்   ஒழியிசைக்கண்   வந்தது.   துயர்   வருதலை
விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர்
வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள். இன்பம் கடல்மற்றுக்
காமம்   அஃதடுங்கால்   துன்பம்   அதனிற்   பெரிது.  ''காமத்தான்
இன்பமுற்றார்க்கு  அதனினாய  துன்பமும் வரும்'', என்ற தோழிக்குச்
சொல்லியது.  காமம்  புணர்வால்  இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம்
கடல்  போலப்  பெரிதாம்;  இனி  அது  தானே  பிரிவால் துன்பஞ்
செய்யுங்கால்,    அத்துன்பம்   அக்கடலினும்   பெரிதாம்.   ''மற்று''
வினைமாற்றின்கண்   வந்தது.   ''அடுங்கால்''   என   வந்தமையின்,
மறுதலை  யெச்சம்  வருவிக்கப்பட்டது.  பெற்ற  இன்பத்தோடு ஒத்து
வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து. காமக்
கடும்புனல்   நீந்திக்   கரைகாணேன்   யாமத்தும்  யானே  உளேன்.
''காமக்கடல்  நிறை புணையாக நீந்தப்படும்'', என்றாட்குச் சொல்லியது
காமமாகிய   கடல்   நீந்தாதேனல்லேன்,  நீந்தியும்  அதற்குக்  கரை
காண்கின்றிலேன்;  அக்காணாமைக்  காலந்தான் எல்லோரும் துயிலும்
அரையிருளாயிற்று,    அவ்வரை   இருட்கண்ணும்   அதற்கு   ஒரு
துணையின்றி  யானேயாயினேன், ஆயும்  இறந்துபட்டுய்ந்து போகாது
உளனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். கடுமை,
ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே
ஆயினேன்  என்பது  நீ  துணையாயிற்றிலை  என்னும்  குறிப்பிற்று.
மன்னுயி  ரெல்லாம்  துயிற்றி அளித்திரா என்அல்ல தில்லை துணை.
இரவின்  கொடுமை  சொல்லி  இரங்கியது.  இரா அளித்தாயிருந்தது;
உலகத்து  நிலை  பெறுகின்ற  உயிர்களையெல்லாம்  தானே துயிலப்
பண்ணுதலான்,  என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை.
''துயிற்றி''  எனத்  திரிந்து  நின்ற வினையெச்சம், அவாய் நிலையான்
வந்த   உடைத்தாதலோடு   முடிந்தது.   ''துணையோடு  ஒன்றுகின்ற
உயிர்களெல்லாம்,  விட்டு  இறந்துபடும்  எல்லையேனாய என்னையே
துணையாகக்   கோடலின்,  அறிவின்று''  என்பது  பற்றி,  ''அளித்து''
என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு. கொடியார் கொடு