திருக்குறள்
ஓலை எண் :   411

Zoom In NormalZoom Out

மையின்   தாம்கொடிய  இந்நாள் நெடிய கழியும் இரா. இதுவும் அது.
காதலரோடு   நாம்   இன்புற்ற  முன்னாள்களிற்  குறியவாய்,  அவர்
பிரிவாற்றேமாகின்ற    இந்நாள்களிலே    நெடியவாய்ச்   செல்கின்ற
கங்குல்கள்;  அக்கொடியாரது கொடுமைக்கு  மேலே  தாம் கொடுமை
செய்யாநின்றன.   தன்னாற்றாமை  கருதாது  பிரிதலின்,  ''கொடியார்''
என்றாள்.  கொடுமை:  கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும்
நீட்டிப்பானும்  உளதாய  ஆற்றாமைக்குக்  கண்ணோடாமை  மேலும்
பண்டையின்    நெடியவாய்க்    கொடியவாகாநின்றன    என்பதாம்.
உள்ளம்போன்று    உள்வழிச்   செல்கிற்பின்   வெள்ளநீர்   நீந்தல
மன்னோஎன்   கண்  நின்  கண்கள்  பேரழகு  அழிகின்றனவாகலின்
அழற்பாலையல்லை,   என்றாட்குச்   சொல்லியது.   மனம்   போலக்
காதலருள்ள  தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என கண்கள்
இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. அது மாட்டாமையின், இனி
அவற்றிற்கு   நீந்துதலேயுள்ளது  என்பதுபட  நின்றமையின்,   ''மன்''
ஒழியிசைக்கண்  வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின்,
''உள்ளம்  போன்று'' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின்
கண்கள் அதனொடு  சென்று  காதலரைக் காண்டல் கூடாது என்னும்
கருத்தால்  ''செல்கிற்பின்''  என்றும்  கூறினாள்.  இதனான் வருகின்ற
அதிகாரமும்  தோற்றுவாய் செய்யப்பட்டது. அஃதாவது,  கண்கள் தம்
காட்சி   விதுப்பான்  வருந்துதல்,   காட்சிவிதுப்புத்   தலைமகனைக்
காண்டற்குவிரைதல்.  இது   படரான்  மெலிந்தவழி  நிகழ்வதாகலின்,
படர் மெலிந்து இரங்கலின் பின் வைக்கப்பட்டது . கண்தாம் கலுழ்வது
எவன்கொலோ? தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது நின் கண்கள்
கலுழ்ந்து  தம்  அழகு  இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும்,  என்ற
தோழிக்குத்   தலைமகள்  சொல்லியது.  இத்தணியா  நோயை  யாம்
அறிந்தது   தாம்  எமக்குக்  காதலரைக்  காட்டலானன்றோ;  அன்று
அத்தொழிலவாய   கண்கள்,   இன்று   எம்மைக்  காட்டச்  சொல்லி
அழுகின்றது என் கருதி?