தே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. இதுவும் அது. எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; மிகவும் இனிதாயிற்று. ''ஓ'' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். ''தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது'' என்பதாம் உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். இதுவும் அது விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே
போக. அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண். ''காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்'', என்ற தோழிக்குச் சொல்லியது. நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்? செயலாற் பிரிந்துநின்றமையின் ''பேணாது'' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், ''பெட்டார்'' என்றும் கூறினாள். ''மன்'' ஒழியிசைக்கண் வந்தது, ''மற்று'' வினை மாற்றின்கண் வந்தது. ''ஓகாரம்'' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் ''கொண்கனை''என்று பாடமாயின் ''என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ''? என்று உரைக்க. இதற்கு ''மன்'' அசைநிலை வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உ |