ற்றன கண். ''நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்'' என்ற தோழிக்குச் சொல்லியது. காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ''ஆயிடை'' எனச் சுட்டு நீண்டது. ''இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை'' என்பதாம் மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து. ''காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்'' என்ற தோழிக்குச் சொல்லியது எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது. ''மறை'' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் ''அறைபறையாகிய கண்'' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, ''அறைபறைக் கண்ணார்'' என்று பாடம் ஓதுவாரும் உளர். ''யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன'' என்பதாம். அது, பசப்புற்ற பருவரல் என விரியும். அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் ''பந்தெறிந்த வயா'' கலித், குறிஞ்.3 என்பதுபோலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின், கண் விதுப்பு அழிதலின்பின் வைக்கப்பட்டது. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க் குரைக்கோ பிற. முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது. என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? ''பிற'' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரி |