திருக்குறள்
ஓலை எண் :   416

Zoom In NormalZoom Out

து.     பிறவும், ஓவும்  அசைநிலை.  மெய் மற்றை  மனவாக்குகளின்
வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க  வந்தமையின்,
இதன்   செயல்   கள்ளமாயிருந்தது  எனத்  தான்  ஆற்றுகின்றமை
கூறியவாறாயிற்று. உவக்காண்எம்  காதலர்  செல்வார்  இவர்காண்என்
மேனி   பசப்பூர்   வது.   காதலர்   பிரிந்து   அணித்தாயிருக்கவும்
ஆற்றுகின்றிலை  என்ற  தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது. பண்டும்
நம்   காதலர்   உங்கே   செல்வாராக;   என்   மேனி  பசப்பூர்வது
இங்கேயன்றோ?     அப்பெற்றியது     இன்று    பிறிதொன்றாமோ?
''உவக்காண்'',  ''இவக்காண்''  என்பன  ஒட்டி நின்ற  இடைச்சொற்கள்,
தேய  அண்மையாற்  கால அண்மை கருதப்பட்டது. ''அவர் செலவும்
பசப்பினது  வரவும்  பகல்  இரவுகளின்  செலவும் வரவும் போல்வது
அறிந்து   வைத்து  அறியாதாய்போல  நீ  சொல்லுகின்றது  என்ன''?
என்பதாம்.   விளக்கற்றம்   பார்க்கும்   இருளேபோல்   கொண்கன்
முயக்கற்றம்  பார்க்கும்  பசப்பு.  இதுவும்  அது. விளக்கினது மெலிவு
பார்த்து  நெருங்கி  வரும்  இருளே போல்;  கொண்கன் முயக்கினது
மெலிவு  பார்த்து  நெருங்கி  வரும்  இப்பசப்பு. ''பார்க்கும்'' என்பன
இலக்கணைச்  சொல்.  ''முன்  பிரியாதிருக்கவும்  தனக்கு  அவகாசம்
பார்த்து  வரும்  பசப்பு,  பிரிவு பெற்றால் என் செய்யாது''? என்பாம்.
புல்லிக்  கிடந்தேன்  புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள்
வற்றே   பசப்பு.  இதுவும்  அது.  முன்னொரு  ஞான்று  காதலரைப்
புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அப்புடைபெயர்ந்த
அளவிலே  பசப்பு  அள்ளிக்  கொள்வது  போல  வந்து  செறிந்தது.
''கொள்வது''   என்பது  குறைந்து  நின்றது.  அள்ளிக்  கொள்வது -
அள்ளிக்     கொள்ளப்படும்     பொருள்.     ''அப்புடைபெயர்ச்சி
மாத்திரத்திற்கு   அவ்வாறாயது,  இப்பிரிவின்கண்  ஆமாறு  சொல்ல
வேண்டுமோ''?  என்பதாம். பசந்தாள் இவள்என்ப தல்லால் இவளைத்
துறந்தார்  அவர்என்பார்  இல்.  ''நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை''
என்ற தோழியோடு புலந்து சொல்லியது.இவள் ஆற்றியிராது பசந்தாள்
என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்து