திருக்குறள்
ஓலை எண் :   418

Zoom In NormalZoom Out

பரல்     இல்லாத   கனியை.    காமம்:    ஆகுபெயர்.   ''அத்து''
அல்வழிக்கண்     வந்தது.     முன்னை    நல்வினை   இல்வழிப்
பெறப்படாமையின்   ''பெற்றார்''   என்றும்,   அவரால்  தடையின்றி
நுகரப்படுதலின்  ''காழில்  கனி''  என்றும்  கூறினாள்.  ''நம்  காதலர்
பிரிதலேயன்றிப்  பின்  வாராமையும்  உடைமையின்  அக்கனி  யாம்
பெற்றிலேம்''   என்பதாயிற்று.   வாழ்வார்க்கு  வானம்  பயந்தற்றால்
வீழ்வார்க்கு  வீழ்வார்  அளிக்கும்  அளி.  இதுவும்  அது.  அறமும்
பொருளும்  நோக்கிப்  பிரிந்தால்,  தம்மை இன்றியமையா மகளிர்க்கு
அவரை   இன்றியமையாக்   கணவர்  அளவறிந்து  வந்து  செய்யும்
தலையளி;   தன்னையே   நோக்கி   உயிர்   வாழ்வார்க்கு  வானம்
அளவறிந்து    பெய்தாற்    போலும்.    ''நம்    காதலர்   நம்மை
விழையாமையின்,  அத்தலையளி  இல்லையாகலான்,  மழை வறந்துழி
அதனான்   வாழ்வார்  போல  இறந்து  படுதலே  நமக்கு  உள்ளது''
என்பதாம்.  வீழுநர்  வீழப்  படுவார்க்  கமையுமே வாழுநம் என்னும்
செருக்கு.  இதுவும்  அது.  தாம் விழையும் கணவரான் விழையப்படும்
மகளிர்க்கு  ஏற்புடைத்து;  காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து
கடிதின்  வருவர்;  வந்தால்  நாம்  இன்புற்று வாழ்தும் என்றிருக்கும்
தருக்கு.   ''நாம்   அவரான்  வீழப்படாமையின்,  நமக்கு  அமைவது
இறந்துபாடு''  என்பதாம்.  வீழப்  படுவார்  கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப்   படாஅர்   எனின்.   ''காதலரை   இயற்பழித்தலை  அஞ்சி
அவரருளின்மை  மறைத்த  நீ  கடவுட்  கற்பினையாகலின்,  கற்புடை
மகளிரால்  நன்கு  மதிக்கப்படுதி'',  என்ற  தோழிக்குச்  சொல்லியது.
கற்புடை   மகளிரால்   நன்கு  மதிக்கப்படுவாரும்;  தாம்  விரும்பும்
கணவரான்  விரும்பப்  படாராயின் தீவினையாட்டியர். சிறப்பு உம்மை,
விகாரத்தால்  தொக்கது.  கெழீஇயின்மை:  நல்வினையின்மை;  அஃது
அருத்தாபத்தியால்  தீவினையுடைமையாயிற்று.  ''தீவினையுடையோற்கு
அந்நன்கு  மதிப்பால் பயனில்லை'', என்பதாம். நாம்காதல் கொண்டார்
நமக்கெவன்  செய்பவோ  தாம்காதல்  கொள்ளாக் கடை. ''அவர்மேற்
காதலுடைமையின்