திருக்குறள்
ஓலை எண் :   421

Zoom In NormalZoom Out

த்தால்     அந்நினைவார்க்கு   அப்பிரிவின்  வருவதோர்   துன்பம்
இல்லையாம்; அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.
புணர்ந்துழியும்  பிரிந்துழியும்  ஒப்ப  இனிது  என்பான், ''எனைத்தும்
இனிது''  என்றான்.  சிறப்பு  உம்மை  விகாரத்தால்  தொக்கது.  தான்
ஆற்றிய  வகை  கூறியவாறு.  நினைப்பவர் போன்று நினையார்கொல்
தும்மல்   சினைப்பது   போன்று  கெடும்.  தலைமகனை  நினைந்து
வருந்துகின்ற  தலைமகள்  தோழிக்குச்  சொல்லியது.எனக்குத் தும்மல்
எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; அதனால் காதலர் என்னை
நினைப்பார்   போன்று   நினையாராகல்   வேண்டும்.   சினைத்தல்:
அரும்புதல்.     சேய்மைக்கண்ணராய     கேளிர்      நினைந்துழி
அந்நினைக்கப்பட்டார்க்குத்     துமமல்     தோன்றும்     என்னும்
உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று
முடியாமை  யுணர்ந்தாள்  சொல்லியதாயிற்று.  யாமும்  உளேம்கொல்
அவர்நெஞ்சத்  தெம்நெஞ்சத்  தோஒ  உளரே  அவர். இதுவும் அது.
எம்முடைய  நெஞ்சத்து  அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்;
அவ்வகையே   அவருடைய   நெஞ்சத்தும்   யாமும்  உளமாதுமோ,
ஆகேமோ?  ஓகார  இடைச்சொல்  ஈண்டு  இடைவிடாமை உணர்த்தி
நின்றது.  ''உளமாயும்,  வினை முடியாமையின் வாராராயினாரோ, அது
முடிந்தும்    இலமாகலின்   வாராராயினாரோ?''   என்பது   கருத்து.
தம்நெஞ்சத்  தெம்மைக்  கடிகொண்டார்  நாணார்கொல்  எம்நெஞ்சத்
தோவா  வரல்.  இதுவும்  அது.  தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம்
செல்லாமல்  எம்மைக்  காவல்  கொண்ட  காதலர்;  தாம் எம்முடைய
நெஞ்சின்கண்  ஒழியாது  வருதலை  நாணார்கொல்லோ?  ஒருவரைத்
தம்கண்   வருதற்கு   ஒருகாலும்   உடம்படாது,   தாம்   அவர்கண்
பலகாலுஞ்சேறல்   நாணுடையார்  செயலன்மையின்,   ''நாணார்கொல்''
என்றாள். மற்றியான் என்உளேன் மன்னோ அவரொடியான்  உற்றநாள்
உள்ள உளேன். அவரோடு புணர்ந்த