திருக்குறள்
ஓலை எண் :   422

Zoom In NormalZoom Out

ஞான்றை    இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா  நின்றாய்; அது
மறத்தல்   வேண்டும்   என்றாட்குச்  சொல்லியது.  யான் அவரோடு
புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும்
உயிர்   வாழ்கின்றேன்;   அது  இன்றாயின்,  வேறு  எத்தால் உயிர்
வாழ்வேன்?  நாள்:  ஆகுபெயர். ''உயிர்  வாழ்வதற்கு  வேறும் உள,
அவை     பெற்றிலேன்''    என்பதுபட    நின்றமையின்,    ''மன்''
ஒழியிசைக்கண்  வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல்
முதலாயின.  ''அவை  யாவும்  இன்மையின்,  இதுவல்லது  எனக்குப்
பற்றுக்  கோடு  இல்லை'',  என்பது  கருத்து. மறப்பின் எவன்ஆவன்
மற்கொல்?  மறப்பறியேன்  உள்ளினும் உள்ளம் சுடும். இதுவும் அது.
அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என்
உள்ளத்தைச்  சுடாநின்றது;  அங்ஙனம்  பிரிவாற்றாத யான் மறந்தால்
இறந்து  படாது உளேனாவது எத்தால்? மறக்கப்படுவது அதிகாரத்தான்
வந்தது.  ''மன்''  ஈண்டும்  அதுபட நின்று  ஒழியிசையாயிற்று. கொல்:
அசைநிலை. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர்
செய்யும்  சிறப்பு. இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம்
செய்வர்  என்றாட்குச்  சொல்லியது. தம்மை யான் எத்துணையும் மிக
நினைந்தாலும்   அதற்கு   வெகுளார்;  காதலர்  எனக்குச்  செய்யும்
இன்பமாவது   அவ்வளவன்றோ?  வெகுளாமை: அதற்கு  உடன்பட்டு
நெஞ்சின்    கண்   நிற்றல்.   தனக்கு   அவ்வின்பத்திற்   சிறந்தது
இன்மையின்  அதனைச்  ''சிறப்பு'' என்றாள். ''காதலர்  நம்மாட்டருள்''
என்றும்  ''செய்யுங் குணம்'' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி
கூறிய   அதனைக்  குறிப்பான்  இகழ்ந்து  கூறியவாறு.  விளியும்என்
இன்னுயிர்   வேறல்லம்  என்பார்  அளிஇன்மை  ஆற்ற  நினைந்து.
தலைமகன்   தூது   வரக்  காணாது  வருந்துகின்றாள்,  வற்புறுத்தும்
தோழிக்குச்  சொல்லியது  முன்பெல்லாம்  நாம் இருவரும் வேறல்லம்
என்று  சொல்லுவாரது  அளியின்மையை  மிகவும்  நினைந்து: எனது
இனிய உயிர் கழியாநின்றது. அளியின்மை - பின் வருவாரா