திருக்குறள்
ஓலை எண் :   426

Zoom In NormalZoom Out

கின்றாள்   ஆகலின்,   அயன்மை   தோன்றக்  கூறினாள். தமக்கும்
காதலருளராய  அவரைக்  கனவிற்  கண்டறிவாராயின்,  நம்  காதலர்
கனவின்கண்   ஆற்றி   நல்குதல்   அறிந்து   நோவார்  என்பதாம்.
நனவினான்  நம்நீத்தார்  என்பர்  கனவினான்  காணார்கொல் இவ்வூ
ரவர்.  இதுவும் அது. மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம்
காதலரைக்   கொடுமை  கூறாநிற்பார்;  அவர்  கனவின்கண் நீங்காது
வருதல்    கண்டறியாரோ?   ''என்னொடு   தன்னிடை   வேற்றுமை
இன்றாயின்,  யான்  கண்டது  தானும்  கண்டமையும்,  அது காணாது
அவரைக்  கொடுமை  கூறுகின்றமையின்  அயலாளேயாம்''   என்னும்
கருத்தால்,   ''இவ்வூரவர்''  என்றாள்.  அஃதாவது,  மாலைப்பொழுது
வந்துழி,  அதனைக்  கண்டு  தலைமகள் இரங்குதல். ''கனா முந்துறாத
வினையில்லை''     பழமொழி.2     என்பதுபற்றிப்     பகற்பொழுது
ஆற்றிஇருந்தாட்கு உரியதாகலின், இது கனவு நிலை உரைத்தலின் பின்
வைக்கப்  பட்டது.  மாலையோ  அல்லை  மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது. பொழுதொடு புலந்து சொல்லியது. பொழுதே;
நீ  முன்னாள்களின்  வந்த  மாலையோ  எனின்  அல்லை;   இருந்த
ஆற்றான்   அந்நாள்  காதலரை  மணந்த  மகளிர்  உயிரையுண்ணும்
இறுதிக்காலமாய் இருந்தாய். முன்னாள் - கூடியிருந்த நாள்.  ''அந்நாள்
மணந்தார்''  எனவே,  பின்  பிரிந்தாராதல்  பெறுதும்.  வாழி என்பது
குறிப்புச்  சொல். ''வாலிழை மகளிர் உயிர்ப்பொதி  அவிழ்க்குங்காலை''
கலித்.நெய்தல்.2  என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது.
''மாலை  நீ  அல்லை''  எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர்.
வேலை  என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர். புன்கண்ணை
வாழி  மருள்மாலை  எம்கேள்போல்  வன்கண்ண  தோநின்  துணை.
தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது. மயங்கிய  மாலாய்;
நீயும்  எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின்  துணையும் எம்
துணை போல வன்கண்