திருக்குறள்
ஓலை எண் :   427

Zoom In NormalZoom Out

மையுடையதோ?     கூறுவாயாக.  மயங்குதல்  -  பகலும்   இரவும்
தம்முள்ளே விரவுதல்;  கலங்குதலும்  தோன்ற  நின்றது.  புன்கண் -
ஒளியிழத்தல்;  அதுபற்றித்  துணையும்  உண்டாக்கிக் கூறினாள். எச்ச
உம்மை  விகாரத்தால்  தொக்கது.  எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும்
இன்பமுற்றிலை  என்னும் குறிப்பால் ''வாழி'' என்றாள். பனிஅரும்பிப்
பைதல்கொள்  மாலை  துனிஅரும்பித் துன்பம் வளர வரும். ஆற்றல்
வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. காதலர் கூடிய நாளெல்லாம்
என்முன்  நடுக்கம்  எய்திப்  பசந்து  வந்த மாலை; இந்நாள் எனக்கு
இறந்துபாடு  வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு
ஒருகால்  மிக  வாராநின்றது.  குளிர்ச்சி  தோன்ற  மயங்கிவருமாலை
என்னுஞ்   செம்பொருள்  இக்குறிப்புணர  நின்றது.  துனி  -  உயிர்
வாழ்தற்கண்  வெறுப்பு.  ''அதனால்  பயன்  ஆற்றுமாறு  என்னை''?
என்பது   குறிப்பெச்சம்.   காதலர்  இல்வழி  மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும். இதுவும் அது. காதலர் உள்ள பொழுதெல்லாம்
என்  உயிர்  தளிர்ப்ப  வந்த  மாலை;  அவர் இல்லாத இப்பொழுது;
அஃது  ஒழிந்து  நிற்றலே  அன்றிக்  கொல்லுங்களரியில் கொலைஞர்
வருமாறுபோல   அவ்வுயிரைக்  கோடற்கு  வாராநின்றது.  ஏதிலர் -
அருள்     யாதுமில்லார்.    ''முன்னெல்லாம்    எனக்கு   நட்பாய்
இன்பஞ்செய்து   வந்த   பொழுதும்,  இன்று  என்மேற்  பகையாய்த்
துன்பஞ்செய்து  வாரா  நின்றது.  இனி  யான் ஆற்றுமாறு என்னை''?
என்பதாம்.  காலைக்குச்  செய்தநன்  றென்கொல்?  எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. இதுவும் அது. காலையும், மாலையும், அவர்
கூடிய   ஞான்று  போலாது  இஞ்ஞான்று  வேறுபட்டு  வாராநின்றன;
அவற்றுள்  யான்  காலைக்குச்  செய்த  உபகாரம் யாது? மாலைக்குச்
செய்த    அபகாரம்   யாது?   கூடிய   ஞான்று   பிரிவர்   என்று
அஞ்சப்பண்ணிய   காலை,   அஃது  ஒழிந்து  இஞ்ஞான்று  கங்குல்
வெள்ளத்திற்குக்  கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால்,  ''நன்று
என்கொல்''  என்றும்,  ''கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த  மாலை
அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ்