ய ஆகுபெயர். ''இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல்
வேண்டும்'', என்பது கருத்து. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். இதுவும் அது. பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். சொல்லுவ போறல்: அதனை அவர்
உணர்தற்கு அனுமானமாதல். ''நயந்தவர்க்கு'' என்று பாடம் ஓதுவாரும் உளர். தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். இதுவும் அது. காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ''அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்'' என்பதாம். பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். இதுவும் அது. அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால்
பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, ''சோரும்'' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. ''அன்றும் பிரிந்தார''் என்று அவரன்பின்மை உணர்த்தி, ''இன்றும் குறித்த பருவத்து வந்திலர்'' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; ''இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ''? என்பதாம். கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். இதுவும் அது. கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொ |