திருக்குறள்
ஓலை எண் :   431

Zoom In NormalZoom Out

டுமையைத்    தாமே  சொல்லாநின்றன; வளைகளும் கழன்று பழைய
இயற்கை   அழகும்  இழந்த  இத்தோள்கள்,  இனி  அதனை  யாம்
மறைக்குமாறு   என்னை?  ''உரைக்கும்''  என்பது  அப்பொருண்மை
தோன்ற  நின்ற  குறிப்புச்  சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது.
''அவரோடு   கலந்த   தோள்களே   சொல்லுவனவானால்,  அயலார்
சொல்லுதல்   சொல்ல   வேண்டுமோ''?   என்பதாம்.   தொடியொடு
தோள்நெகிழ  நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. தான்
ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
யான்  ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள்
மெலிய;  அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப்
பொறாது  யான்  என்னுள்ளே  நோவா நின்றேன். ஒடு - மேல் வந்த
பொருண்மைத்து. ''யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ
கூறுகின்றதற்கு''     என்பதாம்.     பாடு    பெறுதியோ   நெஞ்சே
கொடியார்க்கென்  வாடுதோள்  பூசல்  உரைத்து.  அவ்வியற்பழிப்புப்
பொறாது  தன்  நெஞ்சிற்குச் சொல்லியது. நெஞ்சே; இவள் கொடியார்
என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற
ஆரவாரத்தைச்    சொல்லி;   ஒரு   மேம்பாடு  எய்தவல்லையோ?
வல்லையாயின்   அதனை   ஒப்பதில்லை.  ''கொடியார்க்கு''  என்பது
கொடியர்  அல்லர்  என்பது  தோன்ற  நின்ற  குறிப்புச்சொல். ''வாடு
தோள்''  என்பது  அவை  தாமே  வாடாநின்றன  என்பது  தோன்ற
நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழி