திருக்குறள்
ஓலை எண் :   433

Zoom In NormalZoom Out

யான்   கைகளையும்    ஊக்கி   மெய்களும்   நீங்கிச்    சிறுகாற்று
ஊடறுக்கும்  துணையும்  பசந்திலன'', எனத் தன் வன்மையும்  அதன்
மென்மையும்     கருதி     வெள்கிற்று     என்பதாம்,    ஆகவே,
''அவளுறுப்புக்கள்  ஒன்றினொன்று  முற்பட்டு  நலன் அழியும்,  யாம்
கடிதிற்   சேறும்''  என்பது  கருத்தாயிற்று.  அஃதாவது,   ஆற்றாமை
மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத் தலைமகள் தன் நெஞ்சொடு
செய்திறன்   அறியாது    சொல்லுதல்.  இஃது,   உறுப்புக்கள்   தம்
நலனழிந்தவழி    நிகழ்வதாலின்,   உறுப்பு   நலன்   அழிதலின்பின்
வைக்கப்பட்டது.     நினைத்தொன்று     சொல்லாயோ    நெஞ்சே
எனைத்தொன்றும்  எவ்வநோய்  தீர்க்கும்  மருந்து.  தன் ஆற்றாமை
தீரும்  திறன்  நாடியது.  நெஞ்சே;  இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும்
மருந்தாவதொன்றனை;   யான்   அறியுமாற்றலிலன்,   எத்தன்மையது
யாதொன்றாயினும்  நீ அறிந்து எனக்குச் சொல். எவ்வம் - ஒன்றானும்
தீராமை.    உயிரினும்    சிறந்த    நாணினை   விட்டுச்  செய்வது
யாதொன்றாயினும்  என்பாள்,  ''எனைத்தொன்றும்''  என்றாள்.  காதல்
அவர் இலர் ஆகநீ நோவது பேதமை வாழிஎன் நெஞ்சு. தலைமகனைக்
காண்டற்கண்   வேட்கை   மிகுதியால்  சொல்லியது.  என்  நெஞ்சே,
வாழ்வாயாக;  அவர்  நம்கண்  காதல்  இலராகவும்  நீ  அவர் வரவு
நோக்கி  வருந்துதற்கு  ஏது; நின் பேதைமையே, பிறிதில்லை. ''நம்மை
நினையாமையின்,    நங்கண்    காதல்   இலர்   என்பதுஅறியலாம்,
அஃதறியாமை  மேலும்  அவர்பால்  செல்லக்  கருதாது அவர் வரவு
பார்த்து  வருந்தா  நின்றாய்,  இது  நீ செய்துகொள்கின்றது'' என்னும்
கருத்தால்  ''பேதைமை''  என்றாள். ''வாழி''  இகழ்ச்சிக் குறிப்பு,  ''யாம்
அவர்பால்  சேறலே  அறிவாவது'' என்பதாம். இருந்துள்ளி என்பரிதல்
நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்.  இதுவும் அது.
நெஞ்சே!  அவர்பால்  செல்வதும்  செய்யாது ஈண்டு இறந்து படுவதும்
செய்யாதிருந்து  அவர்  வரவு நினைந்து நீ வருந்துகின்றது  என்னை?
இப்பையுள்  நோய்  செய்தார்  மாட்டு  நமக்கு இரங்கிவரக் கருதுதல்
உண்டாகாது  ''நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார்,
நாம் சேறலே இனித்தகுவது'' என்