திருக்குறள்
ஓலை எண் :   434

Zoom In NormalZoom Out

பதாம்.    கண்ணும் கொளச்சேறி நெஞ்சே  இவைஎன்னைத் தின்னும்
அவர்க்காணல்   உற்று.   இதுவும்   அது.  நெஞ்சே  நீ  அவர்பாற்
சேறலுற்றாயாயின்  இக்கண்களையும்  உடன்  கொண்டு  செல்வாயாக;
அன்றி  நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக்
காண்டல்வேண்டி  நீ  காட்டு  என்று  என்னைத்  தின்பன போன்று
நலியா  நிற்கும். ''கொண்டு'' என்பது, ''கொள'' எனத் திரிந்து  நின்றது.
தின்னும்  என்பது  இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும்
என்பதாம்.   என்றது,   தான்  சேறல்  குறித்து.  செற்றா  ரெனக்கை
விடல்உண்டோ  நெஞ்சேயாம்  உற்றால்  உறாஅ தவர். இதுவும் அது.
நெஞ்சே;  யாம்  தம்மையுறத்  தாம் உறாத நம் காதலரை; வெறுத்தார்
என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.
உறுதல்   -   அன்பு  படுதல்.  ''அவ்வலி  யின்மையின்  அவர்பால்
செல்வதே  நமக்குத்  தகுவது''  என்பதாம். கலந்துணர்த்தும் காதலர்க்
கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. தலைமகன்
கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது. யான்
தம்மொடு   புலந்தால்  அப்புலவியைக்  கலவிதன்னானே  நீக்கவல்ல
காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை
நீக்க  மாட்டாய்;  அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர்
எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற்
செல்லத் துணிவாயாக. ''கலத்தலான்'' என்னும் பொருட்டாய்க் ''கலக்க''
என்பது     திரிந்து     நின்றது.     அதனான்    உணர்த்தலாவது
கலவியின்பத்தைக்  காட்டி, அதனான்  மயக்கிப்  புலவிக்  குறிப்பினை
ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. ''கண்டால் மாட்டாத நீ
காணாதவழி   வெறுக்கின்றதனால்  பயனில்லை''  என்பதாம்.   காமம்
விடுஒன்றோ  நாண்விடு  நல்நெஞ்சேயானோ  பொறேன்இவ்  இரண்டு.
நாண்  தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது. நல்ல  நெஞ்சே;
ஒன்றின்  நாண்  விடமாட்டாயாயின்  காம  வேட்கையை விடு; ஒன்று
நாண்  விடு  -  ஒன்றின்  அது  விடமாட்டாயாயின்  நாணினை விடு;
இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின்
கருத்தாயின், ஒன்றற்கொன்று