திருக்குறள்
ஓலை எண் :   435

Zoom In NormalZoom Out

மறுதலையாய    இவ்விரண்டனையும்  உடன்  தாங்கும் மதுகை யான்
இலன்.  ''யானோ'' என்னும் பிரிநிலை, ''நீ பொறுப்பினும்'' என்பதுபட
நின்றது.  ''நல்நெஞ்சே''  என்றது, இரண்டையும் விடாது பெண்மையை
நிலைபெறுத்தலின்,  ''நல்லை''  என்னும்  குறிப்பிற்று.  ''அது  நன்றே
எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன''்,
என்பதாம்.   முற்று   உம்மை  விகாரத்தால்   தொக்கது.  பரிந்தவர்
நல்காரென்  றேங்கிப்  பிரிந்தவர்  பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
இதுவும் அது என் நெஞ்சே; அவர் இவ்வாற்றாமையை அறியாமையின்
நொந்து  வந்து  தலையளி செய்யாராயினார் என்று கருதி; அறிவித்தற்
பொருட்டு  நம்மைப்  பிரிந்து  போயவர்பின்  ஏங்கிச் செல்லலுற்ற நீ
யாதும் அறியாய் ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக்
காணா  வழிச்சென்று  அறிவித்த  துணையானே நல்க வருவர் என்று
கருதினமையின்  ''பேதை''  என்றாள்.  உள்ளத்தார்   காத  லவர்ஆக
உள்ளிநீ  யாருழைச்  சேறிஎன்  நெஞ்சு இதுவும் அது. என்  நெஞ்சே;
காதலர் நின்னகத்தாராக; முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ
புறத்துத்  தேடிச்  செல்கின்றது யாரிடத்து? ''உள்ளம்'' என்புழி  ''அம்''
பகுதிப்  பொருள் விகுதி. ''நின்னகத்திருக்கின்றவரை அஃது  அறியாது
புறத்துத்  தேடிச்  சேறல்  நகை உடைத்து, அதனை ஒழி''  என்பதாம்.
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும்  இழத்தும் கவின்.
அவரை   மறந்து   ஆற்றல்  வேண்டும்  என்பதுபடச்   சொல்லியது.
நம்மைக்    கூடாவண்ணம்    துறந்துபோயினாரை   நாம்   அகத்து
உடையேமாக;  முன்  இழந்த  புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும்
இழப்பேம்.   ''குன்றின்,  நெஞ்சுபக  எறிந்த  அஞ்சுடர்  நெடுவேல்''
குறுந்.கடவுள்வாழ்த்து  என்புழிப்போல்  ''நெஞ்சு''  என்பது  ஈண்டும்
அகப்  பொருட்டாய்  நின்றது. ''அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார்
ஆகவும்.    நாம்   அவரை   மறத்தல்   மாட்டேமாகவும்,  போன
பொய்க்கவினே   அன்றி  நின்ற  நிறையும்  இழப்பேம்''  என்பதாம்.
அஃதாவது, தலைமகள் மனத்து அடக்க