பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். ''ஒன்று'' என்பது ஈண்டுச் ''சிறிது'' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள். பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. இதுவும் அது. நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை? பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. ''வந்தாற் புலக்கக் கடவேம்'' என்றும், ''புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்'' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், ''பன்மாயக்கள்வன''் என்றாள். தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். ''அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ''? என்பதாம். புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. இதுவும் அது. அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, ''இனி அது வாயாது'' என்று புல்லினேன் வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை. நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். இதுவும் அது. நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். ''புணர'' என்பது ''புணர்ந்து'' எனத் திரிந்து நின்றது. ''யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று'', என்பதாம். அஃதாவது, சேயிடை |