திருக்குறள்
ஓலை எண் :   439

Zoom In NormalZoom Out

ப்    பிரிவின்கண் தலைமகனும்  தலைமகளும்  வேட்கை மிகவினான்
ஒருவரை   யொருவர்   காண்டற்கு   விரைதல்.  தலைமகற்  பிரிவும்
தலைமகள்    ஆற்றாமையும்    அதிகாரப்பட்டு   வருகின்றமையின்
இருவரையும்   சுட்டிப்  பொதுவாகிய  பன்மைப்  பாலாற்  கூறினார்.
பிறரெல்லாம் இதனைத் ''தலைமகன் நினைந்து தலைமகள் விதுப்புறல்''
என்றார்.   ''சுட்டுப்   பெயர்''   சொல்லுவான்   குறிப்பொடு  கூடிய
பொருள்உணர்த்துவதல்லது,  தான்  ஒன்றற்குப்  பெயராகாமையானும்,
கவிக்   கூற்றாய   அதிகாரத்துத்  தலைமகன்  உயர்த்தற்பன்மையாற்
கூறப்படாமையானும் அஃது உரையன்மை அறிக .இதனுள்  தலைமகள்
கூற்று   நிறையழிவான்   நிகழ்ந்ததாகலின்,  அவ்வியைபுபற்றி  நிறை
அழிதலின்  பின்  வைக்கப்பட்டது. வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும்
அவர்சென்ற   நாள்ஒற்றித்  தேய்ந்த  விரல்.  தலைமகள்  காண்டல்
விதுப்பினால்  சொல்லியது.  அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள்
சுவரின்கண்  இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள்
தேய்ந்தன;  அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும்
ஒளியிழந்து     புல்லியவாயின:     இவ்வாறாயும்   அவர்   வரவு
உண்டாயிற்றில்லை.  நாள் -  ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய
காணமாட்டாமை. ''ஒற்ற'' என்பது ''ஒற்றி'' எனத் திரிந்து நின்றது. இனி
யான்   காணுமாறு  என்னை?  என்பதாம்.  நாள்  எண்ணலும்  வழி
பார்த்தலும்   ஒருகாற்  செய்தொழியாது  இடையின்றிச்  செய்தலான்,
விதுப்பாயிற்று.   இலங்கிழாய்   இன்று   மறப்பின்என்  தோள்மேல்
கலங்கழியும்   காரிகை  நீத்து.  ஆற்றாமை  மிகுதலின்  இடையின்றி
நினைக்கற்பாலை   யல்லை;   சிறிது   மறக்கல்   வேண்டும்,  என்ற
தோழிக்குச் சொல்லியது. விளங்காநின்ற இழை